பெரியார் சிலை குறித்த பேச்சு: இன்று கைதாகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் கணல் கண்ணன்?

திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டு பிரிவு தலைவருமான கணல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கணல் கண்ணன், மதுரவாயலில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் `ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை இடிக்க வேண்டும்’ என பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
image
அப்புகாரின் பெரில் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் போலீசாரை குவித்துள்ளனர்.
image
மதுரவாயில், வடபழனி, வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கணல் கண்ணனுக்கு சொந்தமான மூன்று இடங்களில் அவரை கைது செய்வதற்கு போலீசார் தயார் நிலையில் உள்ளனர். இன்று காலை அவரை கைது செய்ய வாய்ப்புள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.