மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கிய அசாம் அரசு

மொய்ராபுரி

சாம் மாநில அரசு ஒரு மதரஸாவை இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.

அசாம் மாநிலம் மோரிகாவ்ன் மாவட்டம் மொய்ராபரியில் ஜாமி-உல்-ஹூதா என்கிற மதராஸா செயல்பட்டு வருகிறது.  இதை 2018-ம் ஆண்டு முதல் நடத்தி வந்த முப்தி முஸ்தபா மீது முஸ்லீம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்து பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இளைஞர்கள் தூண்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் எதிரான சதித் திட்டங்கள் இந்த மதரஸாவில் தீட்டப் படுவதாகவும், மாநில காவல்துறைக்கும், மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் புகார் வந்தது  மதரஸாவை நடத்தி வரும் முப்தி முஸ்தபா, பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா, பங்களாதேஷின் பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணி உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் மேற்கண்ட பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும், பல இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் நிதியுதவியும் பெற்று வந்திருப்பதாக  புகார் வந்ததால் இவர் வீடு மற்றும் மதரஸாவில் மாநில காவல்துறையும், ராணுவத்தினரும், இதர உளவுப் பிரிவினரும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாகச் சோதனை செய்தனர். சோதனையில் பல சென்போன்கள், வங்கி பாஸ்புத்தகங்கள் மற்றும் பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. முப்தி முஸ்தபாவை கைது செய்த காவல்துறை, ஜாமி-உல்-ஹூதா மசூதிக்கும் சீல் வைத்தனர்.

அஸ்ஸாம் மாநில அரசு இன்று காலை முப்தி முஸ்தபா நடத்தி வந்த மதரஸாவை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோரிகான் எஸ்.பி., “முப்தி முஸ்தபா பங்களாதேஷை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அன்சாருல்லா பங்களா அணியின் தலைவர் அமிருதீன் அன்சாரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது.

இந்த ஜாமி-உல்-ஹூதா மதரஸாவில் முஸ்லீம் இளைஞர்களுக்குப் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இங்குப் பயங்கரவாத அமைப்புகள் முகாமிட்டு, அஸ்ஸாமில் சில இடங்களைக் குறிவைத்து படிப்படியாகத் தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்திருக்கிறது.  எனவே இந்த மதரஸா இடிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.