செல்போன் கோபுரங்கள் நிறுவுவதாக கூறி பணமோசடி: தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை

புதுடெல்லி: செல்போன் கோபுரங்கள் நிறுவுவது தொடர்பான மோசடிகள் குறித்து மத்தியத் தொலைத்தொடர்பு துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை, அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செல்ஃபோன் கோபுரங்கள் நிறுவுதல் என்ற பெயரில் சில நேர்மையற்ற நிறுவனங்கள், ஏஜென்சிகள், தனிநபர்கள் பொதுமக்களிடம் அதிகளவில் மாத வாடகை வழங்கப்படும் போன்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது குறித்து தொலைத்தொடர்புத் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுபோல கீழ்கண்ட விஷயங்களையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

  • செல்ஃபோன் கோபுரங்களை நிறுவுவதற்கு வளாகத்தை குத்தகைக்கு, வாடகைக்கு விடுவதில் தொலைத் தொடர்புத்துறை, ட்ராய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதில்லை.
  • தொலைத்தொடப்பு துறை, ட்ராய் அல்லது அதன் அதிகாரிகள் மொபைல் டவர்களை நிறுவுவதற்கு “ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை” வழங்குவதில்லை.
  • செல்ஃபோன் கோபுரங்களை நிறுவுவதற்கு ஏதேனும் நிறுவனம், ஏஜென்சி, தனிநபர் பணம் கேட்டால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிறுவனத்தின் நற்சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்.
  • இதுபோன்ற மோசடி செயலை யாரேனும் கண்டால், அவர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு அது குறித்து புகாரளிக்கலாம்.
  • மேலும் கூடுதலாக, DoT-ன் உள்ளூர் கள அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்

அவர்களின் தொடர்பு விவரங்கள்: https://dot.gov.in/relatedlinks/director-general-telecom என்ற இணையதளத்தில் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.