அமித் ஷா: இந்தியா நிறுவனங்களுக்கு முக்கிய கோரிக்கை..! #Startup

இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புக் கொண்டு இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது சில தடுமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்தது, இதேவேளையில் உலக நாடுகளில் வட்டியை உயர்த்திய காரணத்தால் புதிய முதலீடுகளைப் பெற முடியாமல் பல நிறுவனங்கள் தவித்தது.

கொரோனா தொற்றின் துவக்கத்திலிருந்து இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் மட்டும் சுமார் 25,000 பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு காரணமாக 11,500 பேர் வேலையை இழந்துள்ளனர்.

இப்படி ஸ்டார்ட்அப் சந்தை மோசமான நிலையில் இருக்கும் போது அமித் ஷா முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அமித் ஷா

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பெங்களூரில் பேசுகையில் இந்தியாவின் தொழில்துறையுடன் உள்ள தொடர்பைக் கருத்தில் கொண்டு இந்தியத் தொழிற்துறை நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்-களுக்கு முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மோசமான நிலையிலும் புதிய முதலீடுகளையும் பெற முடியாமல் இருக்கும் இந்த வேளையில் அமித் ஷா இந்திய தொழிற்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது பலர் இதை முக்கிய முதலீட்டு வாய்ப்பாகப் பார்க்க துவங்கியுள்ளார்.

யூனிகார்ன்
 

யூனிகார்ன்

மேலும் அமித் ஷா பேசுகையில் 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரே ஒரு யூனிகார்ன் (ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டார்ட்அப்) மட்டுமே இருந்த நிலையில் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

பெரும் வளர்ச்சி

பெரும் வளர்ச்சி

இன்று இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட யூனிகார்ன் ஸ்டார்ட்அப் களுடன், இந்திய இளைஞர்கள் உலக அரங்கில் நாட்டைப் பிரதிநிதியா விளங்குகின்றனர் என்று பெங்களூரில் கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்திய கூட்டமைப்பு இணைந்து நடத்திய ‘சங்கல்ப் சே சித்தி’ மாநாட்டின் பேசினார்.

440 பில்லியன் டாலர்

440 பில்லியன் டாலர்

இதேபோல் அமித் ஷா அரசின் பல சீர்திருத்த முயற்சிகள் 2014-15ல் 71 ஆவது இடத்தில் இருந்த இந்தியாவை உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் 43 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. 2014 மற்றும் 2021 க்கு இடையில், 440 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது என்று அமித் ஷா கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Amit Shah asks India companies to back startups

Amit Shah asks India companies to back startups அமித் ஷா: இந்தியா நிறுவனங்களுக்கு முக்கியக் கோரிக்கை..! #Startup

Story first published: Friday, August 5, 2022, 16:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.