இறந்த தாயை கட்டி அணைத்து உறங்கிய 3 வயது மாற்றுத்திறனாளி சிறுவன்.. கண்கலங்க வைத்த காட்சி!

3 வயது சிறுவன் இறந்த தாயின் உடலை கட்டியணைத்து உறங்கிய புகைப்படம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

பீகார் மாநிலம் பகல்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இறந்த தாயின் அருகே 3 வயது மாற்றுத் திறனாளி சிறுவன் அவரை கட்டி அணைத்து தூங்கிக் கொண்டிருந்தான். இதையடுத்து அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த 3 வயது சிறுவன் குழந்தைகள் உதவி மையத்திற்கு அனுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் அதிகாரி அர்விந்த் குமார் கூறுகையில், “அந்தப் பெண்ணின் சடலமானது பிணவறையில் 72 மணி நேரமாக இருந்தது. அவரை அடையாளம் காண யாருமே வரவில்லை. அதனால், அவர் யார் என்பது கண்டறிய முடியவில்லை. அதனால், நாங்களே இறுதி சடங்குகளை செய்துவிட்டோம்” என்றார்.

இதையும் படிக்க: உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பெண் குழந்தை; பிஞ்சுக்கைகளால் அடையாளம் காணப்பட்ட அவலம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.