உக்ரேனிய வீரருக்கு ஆண்மை நீக்கம் செய்த ரஷ்ய வீரர் இவர் தான்: வெளியான புகைப்படம்


உக்ரைனில் ரஷ்ய வீரர்களிடம் சிக்கிய உக்ரேனிய வீரருக்கு ஆண்மை நீக்கம் செய்த வீரரை அடையாளம் கண்டுள்ளனர்.

ரஷ்யாவின் தனியார் பத்திரிகையாளர்கள் சிலர் முன்னெடுத்த விசாரணையில் குறித்த நபரின் பெயர் மற்றும் புகைப்படங்கள் அம்பலமாகியுள்ளது.

1993ல் பிறந்த அந்த வீரரின் பெயர் Ochur-Suge Mongush எனவும், ஆனால் குற்றத்தை ஒப்புக்கொள்ள அவர் மறுத்துள்ளதாகவும், ஏற்கனவே அவர் குறித்த விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்றில் ஒப்புதல் அளித்துள்ளதையும் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வெளியான காணொளியானது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
ஜூலை தொடக்கத்தில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் அந்த காணொளி பதிவானதையும் பத்திரிகையாளர்கள் அடையாளம் கண்டனர்.

உக்ரேனிய வீரருக்கு ஆண்மை நீக்கம் செய்த ரஷ்ய வீரர் இவர் தான்: வெளியான புகைப்படம் | Castrating Ukrainian Captive Russian Soldier

@dailymail

மேலும், பிரித்தானிய தனியார் விசாரணைக் குழுவினரிடம் இந்த விவகாரம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ரஷ்ய உளவுத்துறை தம்மை கைது செய்ததாகவும், இரண்டு நாட்கள் விசாரணை முன்னெடுத்ததாகவும், ஆனால் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் அந்த காணொளி போலி என அவர்கள் தெரிவித்ததாகவும் அந்த வீரர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, உக்ரேனிய வீரர்களே இந்த கொடூரத்தை முன்னெடுத்ததாகவும், இதில் ரஷ்ய வீரர்களுக்கு பங்கில்லை என உளவுத்துறை தம்மிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேனிய வீரருக்கு ஆண்மை நீக்கம் செய்த ரஷ்ய வீரர் இவர் தான்: வெளியான புகைப்படம் | Castrating Ukrainian Captive Russian Soldier

@dailymail

ஆனால் ரஷ்ய பத்திரிகையாளர்கள் திரட்டிய தரவுகளின் அடிப்படையில் உக்ரேனிய வீரருக்கு ஆண்மை நீக்கம் செய்தவர் இந்த Ochur-Suge Mongush என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது நடவடிக்கைகள், முகத் தோற்றம், ஒற்றுமை உட்பட நவீன காலகட்டத்தில் பயன்பாட்டில் இருக்கும் அனைத்து சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.