மெரினாவில் பிளாஸ்டிக் தடை; ஒரே வாரத்தில் ரூ.9 லட்சம் அபராதம்!

Chennai Tamil News: சென்னையின் முக்கியமான அடையாளமாக திகழ்வது மெரினா கடற்கரை. சென்னை மக்கள், தமிழகத்தின் இதர பகுதி மக்கள் மட்டும் இங்கு வருவதில்லை. வெளிமாநிலங்கள், வெளிநாட்டு பயணிகளும் கூட இங்கு ஆர்வமாக வந்து போகிறார்கள்.

இப்படி முக்கியத்துவம் பெற்ற மெரினா கடற்கரையில் குப்பைகள் பெருகி காட்சி தருவது வேதனை. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் நிரம்பி கிடப்பது பெரும் அபாயம்.

பொதுஇடங்களை மற்றும் சுற்றுலாத் தளங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அவ்விடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள இன்றளவும் பாடுபட்டு வருகின்றன.

பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

பெருநகர சென்னை மாநகராட்சி பொறுப்பில் இருக்கும் கடற்கரைகளை, பிளாஸ்டிக் இல்லாத மண்டலங்களாக மாற்றும் முயற்சியை வெள்ளிக்கிழமை தொடங்கினார்கள். 

சென்னை மெரினா கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாநிலத்தில் மொத்தம் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் மற்றும் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வார இறுதி நாட்களில் சென்னை மெரினா கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்றும், இது போன்ற சூழல்களில் பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கடற்கரையில் கொட்டுவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் இன்னலுக்கு ஆளாகிறது என மாநகராட்சி கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்பவர்கள் அல்லது பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) முதல், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், அந்தந்த மண்டல சுகாதார அலுவலர்கள் மேற்பார்வையில், மூன்று கடற்கரைகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை சரிபார்க்க சோதனை நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக 18 கடைகளில் இருந்து 1,800 ரூபாய் அபராதமாக அதிகாரிகள் வசூலித்தனர்.

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடத்தப்பட்ட சோதனையில், 2,548 கடைகள் விதிகளை மீறியதாகவும், அவர்களிடமிருந்து 1,861 கிலோகிராம் பிளாஸ்டிக்கைப் பறிமுதல் செய்ததாகவும் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். கடைகளில் அபராதமாக மொத்தம் ரூ.9.17 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.