டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் குழு இயங்கி வந்தது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜ அரசு அமைந்தவுடன்,  திட்டக்குழு கலைக்கப்பட்டது. அதற்குப் பதில் நிதி ஆயோக் அமைப்பு கொண்டு வரப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையின் கலாசார மையத்தில் நிதி ஆயோக் நிர்வாக குழுவின் 7வது கூட்டம் நாளை நடக்கிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும்  வேளாண் தன்னிறைவை திட்டங்கள், தேசிய கல்விக் கொள்கை- பள்ளிக் கல்வி அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை – உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை கூட்டத்தின் விவாதப் பொருளில் இடம் பெற உள்ளன. 2019ம் ஆண்டுக்கு பிறகு இதன் கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.