அவித்த வேர்க்கடலை, பச்சை வாழைப்பழம் இரண்டையும் வாரத்துக்கு ஒரு நாளவது சாப்பிட்டுப் பாருங்கள், உங்களுடைய ஹார்மோன்களை சம நிலைப்படுத்தி, முடி, தோல், பிரச்னைகளை சரி செய்து நிறைய நன்மைகளை அளிக்கும். அதற்கு எப்படி சாப்பிட வேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள்.
எளிமையான உணவுகளில்கூட நல்ல ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தலாம். அப்படிப்பட்ட எளிய உணவுகளில் ஒன்றுதான் பச்சை வாழைப்பழம், அவித்த வேர்க்கடலை.

அவித்த வேர்க்கடலை, பச்சை வாழைப் பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கிறதா என்று நீங்கள் யோசிக்கலாம். இருப்பினும், இந்த எளிய உணவில் உள்ள நன்மை உங்களை ஆச்சரியப்படுத்தும்.
அவித்த வேர்க்கடலை, பச்சை வாழைப்பழம் தரும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். விரைவாகவும் எளிதாகவும் தயாரிக்கக்கூடிய இந்த எளிய உணவு உங்கள் முடி, தோல் மற்றும் ஹார்மோன்களுக்கு நல்லது என்று அவர் கூறுகிறார். அவித்த வேர்க்கடலை, பச்சை வாழைப்பழம் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட எளிய உணவாகும்.

இந்த உணவில் உள்ள நன்மைகளைத் தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு முன், அவித்த வேர்க்கடலை, பச்சை வாழைப்பழம் உணவை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை வாழைப்பழம், வேர்க்கடலை.
இபோது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பச்சை வாழைப்பழத்தை தவாவில் எண்ணெய், சிறிது உப்பு மற்றும் உங்களுக்கு விருப்பமான மசாலாப் பொருட்களுடன் வறுக்கலாம். வேர்கடலையை தண்ணீரில் வேகவைத்து, கொதிக்கும் போது தண்ணீரில் உப்பு சேர்க்கவும். இந்த உணவு நல்ல கூந்தல், சருமம் மற்றும் ஹார்மோன்கள் சீரான நிலையில் இருக்க, வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை சாப்பிட வேண்டும் என்று ருஜுதா கூறுகிறார்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்தது.
அவித்த வேர்க்கடலை, பச்சை வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
- அவித்த வேர்க்கடலையில் ஒரு ஆக்ஸிஜனேற்ற பலன் உள்ளது. இது பச்சை அல்லது வறுத்த வேர்க்கடலையை விட சிறந்தது என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு எதிர்ப்புத் தன்மையை அளித்து நன்மைகளை அளிக்கும்.
- அதே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்களுக்கு வைட்டமின் பி6 அதிக அளவு அளிக்கும். இது உங்கள் எடையைக் குறைத்து, உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.
- அவித்த வேர்க்கடலையில் உள்ள தாதுக்கள் உங்கள் உடல் மற்றும் இதயத்தை சரி செய்யும்.
- பச்சை வாழைப்பழங்களில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தும். வழக்கமான இரத்த சர்க்கரையை மேம்படுத்தும் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது. பச்சை வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
- வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, மற்றும் வாழைப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல், முடி மற்றும் செரிமானத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்யும். வேகமாக எடை குறைப்பதற்கான டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் அடையப்படும் விரைவான எடை இழப்பு மந்தமான சருமம், உடையக்கூடிய, வறண்ட மற்றும் மெல்லிய முடி, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். பச்சை வாழைப்பழம் மற்றும் அவித்த வேர்க்கடலையை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது, இந்த வேகமாக எடையைக் குறைப்பதற்கான டயட்களின் பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம்.
- எண்டோமெட்ரியோசிஸ் உள்ளவர்கள், வலிமிகுந்த மாதவிடாய் மற்றும் அதிக ப்ரோலாக்டின் அளவை அனுபவிப்பவர்கள், பச்சை வாழைப்பழம் மற்றும் அவித்த வேர்க்கடலையை கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
இவை எளிய உணவுதான், ஆனால், அவித்த வேர்க்கடலை மற்றும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது இல்லையா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“