இன்று வெள்ளையனே வெளியேறு தினம் (ஆக.,8 1942)| Dinamalar

இந்தியா சுதந்திரம் பெற காரணமாக அமைந்த போரட்டங்களுள் மிக முக்கியமானது “வெள்ளையனே வெளியேறு’ போராட்டம். இதில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் நினைவு தினம் இன்று (ஆக., 8ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

உடனடி விடுதலை

மகாத்மா காந்தி துவக்கிய “ஒத்துழையாமை இயக்கத்தை’ பல தலைவர்கள் ஏற்க மறுத்தனர். இதன் பின் ஒரு மாதம் கழித்து, 1942 ஆக., 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பேசிய மகாத்மா காந்தி “செய் அல்லது செத்துமடி’ என்ற கோஷத்துடன் இப்போராட்டத்தை துவக்கி வைத்தார். மறுநாள் ஆக., 9ம் தேதி, காந்தி, நேரு உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறை பிடித்தனர்.

இதனையடுத்து இப்போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. இது ஆங்கிலேயர்கள் மனதில், இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என்று உணர வைத்தது. இதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து இதே ஆக., மாதம் தான் இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.