ஊறவைத்த பாதாம், திராட்சை… தினமும் காலையில் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அன்றாட உணவு பழக்கம், அதற்கேற்ப வேலை என அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளது. தினம் காலை எழுந்தவுடன் பல் துலக்கி, சூடாக டீ, காபி குடிப்பதை பலர் வழக்கமாக வைத்திருப்பர். அத்துடன் சிலர் உடற் பயிற்சி, யோகா, நடைபயிற்சி செய்வர். அவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. நாள் முழுவதும் புத்துணர்சியுடன் இருப்பதற்கு உகந்ததாகவும் உள்ளது.

அந்தவகையில், காலையில் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிடுவது நாள் முழுவதும் எனர்ஜியாக இருக்கவும், சுறுசுறுப்பாக உணர வைக்கவும் செய்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். பாதாம் நினைவாற்றலுக்கு நல்லது என்றும் கூறுகின்றனர். மருத்துவர் டிக்ஸா பவ்சர் காலையில் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிடுவதன் நன்மைகளை கூறுகிறார்.

ஊறவைத்த பாதாம், திராட்சை காலையில் சாப்பிடுவது சிறந்த தொடக்கமாக இருக்கும் என்கிறார். இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட வேண்டும். பாதாம் சூடான பொருளாகவும், திராட்சை குளிர்சியானதாகவும் இருப்பதால், அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது சிறந்ததாகும்.

பாதாம், திராட்சை நன்மைகள்

1.காலையில் உற்சாகமாக உணர வைக்கிறது.

2.மாதவிடாய் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

3.செரிமானத்தை மேம்படுத்துகிறது.

4. பாதாம் ஞாபக சக்தி, நினைவாற்றலுக்கு நல்லது.

5.ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு நல்லது.

6.ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் இதயத்துக்கு நல்லது.

பாதாம் ஊற வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பாதாம் ஊற வைத்து சாப்பிடும் போது டானின் அகற்றப்பட்டு, நட்ஸ், ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. ஊற வைத்து சாப்பிடும் போது பாதாம் தோல் எளிமையாக அகற்றப்பட்டு செரிமானத்துக்கு உதவுகிறது.

பாதாமின் மற்ற நன்மைகள்

பாதாமில் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எடை குறைப்பு, எலும்பு ஆரோக்கியம், மனநிலையை மேம்படுத்துதல், இதய நோய், புற்றுநோய் நீரிழிவு நோய்க்கான ஆபத்தை குறைத்தல் என பல நன்மைகள் உள்ளதாக சுகாதார ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.