ரஜினி வீட்டில் விசேஷம்; வாழ்த்தி மகிழ்ந்த நண்பர்கள், உறவினர்கள்!

நடிகர் ரஜினி காந்த் – லதா ரஜினி காந்த் தம்பதிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் `வஞ்சக‌ர் உலகம்’ என்ற படத்தில் நடித்தவருமான விசாகனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சென்னை கடற்கரை சாலையிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்தத் திருமணத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும், ஏராளமான சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

சௌந்தர்யா – விசாகன்

செளந்தர்யா – விசாகன் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யா தாய்மை அடைந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சௌந்தர்யாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. கணவர் விசாகனின் இல்லத்தில் வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் விசாகனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரும் நெருங்கிய சில உறவினர்களும் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார்களாம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதில் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.