ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் தெஹ்ரிக் இ தாலிபன் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் தேடப்பட்ட பட்டியலில் இருந்த உமர் காலித் கொரசனி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 3 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆப்கானின் பக்டிகா மாகாணத்தில் உமர் காலித் கொரசனி சென்ற கார், சாலையோர குண்டுவெடிப்பில் வெடித்து சிதறியது.
இதில், அந்த பயங்கரவாதி உள்பட மூன்று கமாண்டர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.