டெஸ்லா: இந்தோனேசியா உடன் 5 பில்லியன் டாலர் டீல்.. எலான் மஸ்க் மாஸ்டர் பிளான்..!

அமெரிக்காவின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முடியாத காரணத்தால் நேரடி விற்பனை திட்டத்தைக் கூடத் திரும்பப் பெற்ற நிலையில் தற்போது இந்தோனேசியா உடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ஜெர்மனி நாடுகளில் டெஸ்லா கார்களின் உற்பத்தி பணிகளைத் துவங்கியுள்ள நிலையில் அதிகப்படியான செலவுகளை இத்தொழிற்சாலைகள் ஈர்த்து வருவதால் டெஸ்லா நிதி நிலை தொடர்ந்து சரிந்து வருவதாக எலான் மஸ் கூறினார்.

இந்நிலவையில் டெஸ்லா-வின் இந்தோனேசியா உடனான ஒப்பந்தம் எதற்காக என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. சீனாவில் டெஸ்லா தனது ஆதிக்கத்தை இழந்து வரும் வேளையில் இந்தோனேசியா உடன் 5 பில்லியன் டாலர் டீல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாக உடையும் டெஸ்லா.. எலான் மஸ்க் திட்டம் என்ன..?!

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா கார்களின் தயாரிப்பின் வேகத்தை அதிகரிக்கப் பெரும் தடையாக இருப்பது பேட்டரி மற்றும் பேட்டரி மாடியூல் தயாரிப்பது தான் எனக் கருத்து நிலவும் வேளையில், எலான் மஸ்க் இப்பிரிவை வேகப்படுத்தப் பல புதிய தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள நிலையில், புதிய பேட்டரியை தயாரிக்கக் கூடுதலான உற்பத்தி பொருட்களை வாங்க இந்தோனேசியா உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தோனேசியா

இந்தோனேசியா

இந்தோனேஷிய நாட்டின் கடல்சார் மற்றும் முதலீட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் லுஹுட் பந்த்ஜைதன்
இன்று வெளியிட்ட அறிவிப்பில் டெஸ்லா சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான நிக்கல் (Nickel) உலோகத்தை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

நிக்கல் உலோகம்
 

நிக்கல் உலோகம்

இந்தோனேசியாவில் அதிகப்படியான நிக்கல் இருக்கும் வேளையில் டெஸ்லா-வை அந்நாட்டில் புதிய தொழிற்சாலையை அமைக்க அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்திய வந்த நிலையில் தற்போது நிக்கல் உலோகத்தை மட்டும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

சுலவேசி தீவில்

சுலவேசி தீவில்

சுலவேசி தீவில் உள்ள மொரோவாலி-யில் இயங்கி வரும் நிக்கல் உலோக நிறுவனங்களுடன் டெஸ்லா ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இந்தோனேசிய நாட்டின் கடல்சார் மற்றும் முதலீட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் லுஹுட் பந்த்ஜைதன் கூறினார். டெஸ்லாவின் லித்தியம் பேட்டரிகளில் நிக்கல் பயன்படுத்தப்படும்.

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தோனேசியா தனது நாட்டிலேயே எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க ஆர்வமாக உள்ளது, மேலும் முதலீட்டாளர்களுக்கு விநியோகத்தை உறுதி செய்வதற்காக நிக்கல் தாது ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலீடு

முதலீடு

இதன் வாயிலாக இந்தோனேசியா கடந்த சில வருடத்தில் சீன ஸ்டீல் நிறுவனங்கள், எல்ஜி மற்றும் ஹூண்டாய் போன்ற தென் கொரிய நிறுவனங்களிலிருந்தும் அதிகளவிலான முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்தது. இருப்பினும், பெரும்பாலான நிக்கல் முதலீடுகள் இதுவரை நிக்கல் பிக் ஐயன் மற்றும் ஃபெரோனிகல் போன்ற கச்சா உலோக உற்பத்திக்கு சென்றுள்ளது.

வரி உயர்வு

வரி உயர்வு

அதிக மதிப்புள்ள பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் அதே வேளையில் வருவாயை அதிகரிக்க ஏற்றுமதி செய்யப்படும் உலோகங்களுக்குக் கூடுதலான ஏற்றுமதி வரி விதிக்க இந்தோனேசிய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indonesia got $5 billion deal from Tesla on nickel products

Indonesia got $5 billion deal from Tesla on nickel products டெஸ்லா: இந்தோனேசியா உடன் 5 பில்லியன் டாலர் டீல்.. எலான் மஸ்க் மாஸ்டர் பிளான்..!

Story first published: Monday, August 8, 2022, 18:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.