மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே தினா.விலக்கு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் சாரதி. இவர் சொந்தமாக ஒரு ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்துள்ளார். இவருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன.
இந்த நிலையில், இன்று காலை குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் இருந்த நிலையில் இவரது 5 வயது குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஜனனி என்ற அந்த சிறுமியை பைக்கில் வந்த ஒரு தம்பதி அலேக்காக தூக்கிக் கொண்டு அப்படியே பைக்கில் சென்று விட்டனர்.
இதனால் பதறிப்போன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோந்து போலீசுக்கு தகவல் கொடுத்து சிசிடிவி கேமராக்களை கொண்டு விசாரணை நடத்திய நிலையில் அந்த மீண்டும் குழந்தையை கொண்டு வந்து விட கடத்திக் கொண்டு சென்ற தம்பதி திரும்பி வந்தது.
அப்போது அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்த போது குழந்தை அழகாக இருந்ததால் தூக்கி சென்றோம். மீண்டும் மனம் கேட்காமல் கொண்டு வந்து விட்டுவிட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.