கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து விவசாயம் மற்றும் அறிவியல் தொடர்பான பணிகளுக்காக ஈரானின் கண்காணிப்பு செயற்கைகோள் ரஷ்ய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளின் நலனுக்காக ‘கயாம்’ என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக இருநாடுகளும் கூறியுள்ள நிலையில், இந்த செயற்கைகோள் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவ இலக்குகளை கண்காணிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.