சர்வதேச அளவில் சிப் பற்றாக்குறையானது நிலவி வருகின்றது. இதனால் பல்வேறு துறைகளில் சவாலான நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக சிப் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் வாகனங்கள் உற்பத்தி, மின் சாதனங்கள் உற்பத்தியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இன்னும் மந்த நிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிப் பற்றாக்குறை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தான் அமெரிக்காவின் இந்த முடிவானது வந்துள்ளது எனலாம்.
கர்நாடக, மகாராஷ்டிரா-வுக்கு போட்டியாகத் தமிழ்நாடு.. சென்னை-யில் சிப் தொழிற்சாலை..!

செமிகண்டக்டர் உற்பத்தியில் கையெப்பம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுடனான போட்டித் தன்மையை அதிகரிக்கும் விதமாக, அமெரிக்க செமிகண்டக்டர் உற்பத்தியில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான மசோதாவிலும் பைடன் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவின் உற்பத்தியினை அதிகரிக்கலாம்.

சலுகைகள்
Chips and Science Act என்று கூறப்படும் இந்த மசோதாவில், கணினி சிப்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 52 பில்லியனுக்கு அதிகமான தொகையும், பில்லியன் டாலர் மதிப்பிலான வரி சலுகையும் இதில் அடங்கும். அதோடு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் நிதியினை வழங்கும். மேலும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாட்டிற்கும் பில்லியன் கணக்கான டாலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

சிப் உற்பத்தி அதிகரிக்கும்
இந்த மசோதாவின் மத்தியில் அமெரிக்காவில் மைக்ரான் நிறுவனம் 40 பில்லியன் டாலர் சிப் தயாரிப்பில் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் 8000 பேருக்கு புதியதாக வேலை வாய்ப்பும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே குவால்காம் மற்றும் குளோபல் ஃபவுண்டரிஸ் இடையே புதியதாக அறிவிக்கப்பட்ட கூட்டாண்மை, அதன் சிப் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டமிட்டுள்ளது. இது மேற்கொண்டு அமெரிக்காவின் சிப் உற்பத்தியினை அதிகரிக்க உதவும். இது அமெரிக்காவின் உற்பத்தி சந்தை பங்கினை 2%ல் இருந்து, 10% ஆக உயர்த்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கு போட்டி
செமி கண்டக்டர்கள் மிக முக்கிய தேவையாக இருந்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் உலகளாவிய அளவில் சப்ளை சங்கிலியில் பிரச்சனை நிலவி வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா அண்டை நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகின்றது. ஆக அமெரிக்க அரசின் இந்த புதிய மசோதாவால் அமெரிக்காவின் சிப் உற்பத்தி அதிகரிக்கும். இது அமெரிக்காவின் பாதுகாப்பினை அதிகரிக்க வழிவகுக்கும். மொத்ததில் இது சீனாவுக்கு பெரும் பிரச்சனையாக அமையும். போட்டியாகவும் அமையும்.
Joe biden signs china competition bill to boost USA chipmakers
Joe biden signs china competition bill to boost USA chipmakers/சீனாவுக்கு எதிராக களத்தில் குதிக்கும் அமெரிக்கா.. இனி ஆட்டம் வேற லெவலில் இருக்கலாம்!