லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்!


ஜேர்மனியில் லொட்டரியில் வென்ற கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்டு ஃபிளஷ் செய்த வயதான பெண் சொன்ன காரணம் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஜேர்மனியின் Essen நகரத்தைச் சேர்ந்த Angela Maiers எனும் 63 வயதான பெண், லொட்டரியில் அடித்த ஜாக்பாட் மூலமாக 330,000 பவுண்டுகள் வென்றார். இது தற்போதைய இலங்கை பண மதிப்பில் ரூபாய் 14.33 கோடிகளாகும்.

தனது பணத்தை லொட்டரி நிறுவனத்திடமிருந்து வாங்கி வீட்டுக்கு கொண்டுவந்த அப்பெண், தனது அதிர்ஷ்டத்தை கொண்டாடுவதற்காக 5 போத்தல் champagne பீர்களை குடித்தார்.

அப்போது, தனக்கு வந்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது அவரது இறந்துபோன கணவரை கவனித்துக்கொண்ட முதியோர் இல்லத்திலுருந்து வந்த பில் ஆகும்.

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! | German Lottery Winner Flushed Jackpot Money ToiletImage Credit: ALAMY  

அப்பெண்ணுக்கு, ஜேர்மனியின் தேசிய லொட்டரியில் பரிசு வென்ற தகவலை அறிந்துகொண்ட முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள், அவரது கணவரின் மருத்துவ செலவுகளுக்கு பணம் கட்டுமாறு அந்த நோட்டிஸை அனுப்பி வைத்துள்ளனர்.

ஏற்கெனவே குடிபோதையில் இருக்க, இந்த பில் அவரது மகிழ்ச்சியை முற்றிலுமாக சிதறடித்த நிலையில், தனக்கு அதிர்ஷ்டமாக கிடைத்த இந்த பணம் வேறு யாருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்று முடிவெடுத்தார்.

வீட்டில் வைத்திருந்த 800 யூரோ 500 நோட்டுக்களை தனது கைகளாலேயே கிழித்து கழிவறை சிங்க்கில் வீசி ஃபிளஷ் செய்தார்.

இதன் விளைவாக, பில் செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று எசென் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடிபோதையில் தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கழிவறையில் போட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடிபோதையில் அவர் தனது பணத்தை அழித்தது சட்டவிரோதமானது அல்ல என்று கூறியது.

அதே நேரம், முதியோர் இல்லத்திற்கு பணம் செலுத்தாமல் இருக்க அவர் பணத்தை ஒளித்துவைத்துக்கொண்டு, பொய்யான கதையை உருவாக்கியிருக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் ஏஞ்சலா உண்மையைச் சொல்கிறாரா என்பதை ஒரு நிபுணர் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏஞ்சலா இந்த வழக்கைத் தீர்ப்பதற்கு இழப்பீடாக 4,000 யூரோக்கள் (£3,310) செலுத்த ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் 2014-ஆம் ஆண்டு ஜேர்மனியின் Essen நகரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.