5 ஜி அறிமுகம் ஆகிறது; இனி..ஸ்பீடு அள்ளுமே!

இந்தியாவில் 4ஜி அலைக்கற்றை தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக ஏற்பட்டு உள்ள தேவையை கருத்தில் கொண்டு 5ஜி அலைக்கற்றை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதற்கான ஏலம் கடந்த ஜூலை 26ம் தேதி துவங்கியது. இதில், 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றை ஏலம் விடுவதற்காக, மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை முடிவு செய்தது.

இதன் மதிப்பு, ரூ.4.3 லட்சம் கோடி. இந்த 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் கலந்துகொண்டன.

மொத்தம் 7 நாள் நடந்த ஏலத்தில் 40 சுற்றுகளுக்கு பிறகு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்து இருந்தது.

தட்டி தூக்கிய அண்ணாமலை; திமுக ஷாக்!

இந்த 5 ஜி ஏலம் சுமார் 5 லட்சம் கோடி வரை எடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 1.5 லட்சம் கோடி வரை மட்டுமே ஏலம் போனதாக அறித்து தொலைத்தொடர்பு துறை சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ஆனாலும், தற்போதைய நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ மிகப்பெரிய அளவிலான 5 ஜி அலைக்கற்றையை வாங்கி இருக்கிறது. மொத்த அலைக்கற்றை ஏலத்தில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஜியோ நிறுவனத்திடம் உள்ளது.

இதற்கிடையே 5 ஜி சேவை செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முதற்கட்டமாக 13 நகரங்களில் வெளியிடப்படும் என, தகவல் வெளியாகி இருந்தது.

விஜயகாந்த் மகன் திருமணம்; விழாவில் பங்கேற்கும் மோடி?

மத்திய அரசு 5 ஜி வெளியீட்டு தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அக்டோபர் மாதத்தில் 5 ஜி அறிமுகமாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 29ம் தேதி 5 ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவார் என்ற தகவல் வெளியாகி இருப்பதால் சமூக வலைதளவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

5 ஜி சேவை முதற்கட்டமாக சென்னை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம் நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.