தங்கம் விலை சரிவு.. இன்று வாங்க சரியான வாய்ப்பு தான்..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது இன்றும் பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது வரவிருக்கும் பணவீக்க தரவின் மத்தியில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

அமெரிக்க டாலரின் மதிப்பிலும் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்காவின் மத்திய வங்கியினை மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.

இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டியால், பொருளாதாரம் மந்த நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் கொடுத்த நெருக்கடி.. ‘வேறு வழியில்லை’ எலான் மஸ்க் புலம்பல்..!

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

மந்த நிலைக்கு மத்தியில், டாலர் மதிப்பு, பத்திர சந்தை என அனைத்தும் சரிவினைக் காணலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.ஆக நீண்டகால நோக்கில் இது தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம். தங்கம் விலையினை ஆதரிக்கும் விதமாக உக்ரைன் பிரச்சனை, சீனா தாய்வான் பிரச்சனை என பலவும் உள்ளன.

தலைவலி தான்

தலைவலி தான்

மொத்தத்தில் இன்று வெளியாகவிருக்கும் பணவீக்க தரவானது வரவிருக்கும், மத்திய வங்கியின் நடவடிக்கையில் எதிரொலிக்கலாம். ஆக இதன் பக்கம் முதலீட்டாளார்களின் கவனம் திரும்பியுள்ளது.

ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, பணவீக்க தரவானது ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜுலை மாதத்தில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்
 

முக்கிய லெவல்

ஆக எதிர்பார்ப்பினைபோல வந்தால், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தும். இதற்கிடையில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் 1780 டாலர்களாகவும், இதே 1810 டாலர்கள் ரெசிஸ்டன்ஸ் லெவல்களாகவும் உள்ளது. இதே இந்தியாவில் 10 கிராமுக்கு 52,100 ரூபாய் சப்போர்ட் லெவலாகவும், 52,800 ரூபாய் ரெசிஸ்டன்ஸ் லெவல்களாகவும் உள்ளது.ரெசிஸ்டன்ஸ் லெவல்களாகவும் உள்ளது.

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 7.20 டாலர்கள் குறைந்து, 1804.95 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை சற்று குறைந்து, 20.350 டாலராக அதிகரித்து காணப்படுகின்றது. தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும் நிலையில், வெள்ளி விலை சற்று குறைந்து தான் காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

தங்கம் விலையானது தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 212 ரூபாய் குறைந்து, 52,277 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை கிலோவுக்கு 288 ரூபாய் குறைந்து, 58,503 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும் நிலையில், வெள்ளி விலை சற்று குறைந்து தான் காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, 4893 ரூபாயாகவும், இதே சவரனுக்கு குறைந்து, 39,144 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, 5338 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,704 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,380 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 30 பைசா குறைந்து, 64.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 642 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 64,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

 

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று – ரூ.48,930

மும்பை – ரூ.47,600

டெல்லி – ரூ.47,750

பெங்களூர் – ரூ.47,650

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,930

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 10th August 2022: Gold prices subdued as investors await USA inflation Data

gold price on 10th August 2022: Gold prices subdued as investors await USA inflation Data/தங்கம் விலை சரிவு.. இன்று வாங்க சரியான வாய்ப்பு தான்..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

Story first published: Wednesday, August 10, 2022, 12:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.