நடிகர் தற்கொலை முயற்சி
8/10/2022 11:55:32 PM
கொல்கத்தா: மனைவி, மாமியார் கொடுமையால் பெங்காலி நடிகர் சைபல் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரின் கஸ்பா பகுதியில் பெங்காலி நடிகர் சைபல் பட்டாச்சார்யா, குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்து கொள்வதற்காக தன்னைத்தானே உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சித்தரஞ்சன் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் சைபல் பட்டாச்சார்யா வீடியோ ஒன்றை பதிவு செய்தார். அந்த வீடியோவில் அவர் தனது மனைவி மற்றும் மாமியார் மீது பல்வேறு குற்றங்களை கூறினார். இதுகுறித்து விசாரிக்கிறோம்’ என்றனர்.