பங்களாவுக்குள் புகுந்த எஃப்பிஐ அதிகாரிகள்… செம கடுப்பான ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக பதவி வகித்துவந்த டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2020 இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவினார். அமெரிக்க சட்டதிட்டங்களின்படி, அதிபர் பதவியில் இருந்து விலகுபவர், பதவிக் காலத்தின்போது தான் கையெழுத்திட்ட கோப்புகள் உள்ளிட்டவை தேதிய ஆவணக் காப்பகத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், டொனால்ட் ட்ரம்ப அதிபர் பதவியில் இருந்து வெளியேறியபோது, ஆவணங்களை முறைப்படி ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, புளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்பின் பங்களாவில் 10 க்கும் மேற்பட்ட பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை தேசிய ஆவணக் காப்பக நிர்வாகம் சில மாதங்களுக்கு முன் பறிமுதல் செய்தது.அத்துடன் இதுதொடர்பாக மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொள்ளும்படி சட்ட அமைச்சகத்துக்கு ஆவணக் காப்பகம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரையின்படி, ட்ரம்பின் பங்களாவில் மேலும் ஏதாவது அரசு ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து எஃப்பிஐ தரப்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், இந்த சோதனை குறித்து ட்ரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.

போருக்கு தயாராகிறதா தைவான்..? சீனா தைவான் எல்லையில் பரபரப்பு..!

“அமெரிக்காவின் எந்தவொரு அதிபருக்கும் இப்படி நேர்ந்ததில்லை. எனது பங்களாவுக்குள் நுழைந்து அங்குள்ள அலமாரிகளை உடைத்து எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

ஏழை மற்றும் வளரும் நாடுகளில் தான் இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். வரும் 2024 இல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், நான் மீண்டும் போட்டியிடுவதை தடுக்கவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன. அமெரிக்காவுக்கு இது இருண்ட காலம்” என்று மனம்நொந்து கூறியுள்ளார் ட்ரம்ப்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அண்மையில் தமது ஆதரவாளர்களுடன் சென்ற ஓபிஎஸ், அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், நினைவு் பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றதாக இபிஎஸ் தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அரசு ஆவணங்களை வீட்டுக்கு எடுத்து சென்றதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதே குற்றச்சாட்டு இருப்பதும், அதனடிப்படையில் அவரது சொகுசு பங்களாவில் எஃப்பிஐ சோதனை நடத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.