காரைக்குடியில் தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவன் தவறி விழுந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Leaders Group of School என்ற CBSC பள்ளியில் படித்து வந்த சிறுவன் இரண்டாவது மாடியில் இருந்து பபுள் கம்-ஐ துப்ப முயன்றபோது கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.