வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர் : ”நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் சந்திக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, ராணுவ அதிகாரிகளின் கல்வி மற்றும் பயிற்சி முறையை மேம்படுத்துவதோடு, அதில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது,” என,விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.
ராணுவத்தில் பணியில் சேர விரும்புபவர்களை தயார் செய்வதற்காக, குஜராத்தின் காந்திநகரில், தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த பல்கலையுடன் நம் விமானப்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் கையெழுத்திட, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேற்று காந்திநகர் வந்தார்.
அப்போது நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:தகவல் யுகத்தில் அறிவு ஒரு மைய ஆதாரமாக மாறி வருகிறது. மேலும் போர் யுக்தி மற்றும் புவிசார் அரசியல், தகவல் பரவலால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.பாதுகாப்பு அச்சுறுத்தலின் தன்மைகளும் மாறி வருகின்றன. இவற்றை எதிர்கொள்ள நாம் பல புதிய வழிமுறைகளை கையாள வேண்டி உள்ளது.

இவை நாம் முன்பின் அறிந்திடாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இதுபோன்ற சவாலான சூழலை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான, புதிய நடைமுறைகளை நாம் கண்டறிய வேண்டும்.எனவே எதிர்கால போர்களுக்கு நம் அதிகாரிகளை தயார் செய்ய வேண்டுமெனில், அவர்களுக்குஅளிக்கப்படும் பயிற்சி மற்றும் கல்வியை மேம்படுத்துவதுடன், பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement