பாண்டா: உத்தர பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் உள்ள மர்க்கா என்ற பகுதியிலிருந்து ஒரு படகில் சுமார் 40 பேர், பதேபூர் மாவட்டத்தில் உள்ள ஜராலி படித்துறைக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது படகு யமுனை ஆற்றில் கவிழ்ந்தது. 13 பேர் நீந்தி கரையேறினர். 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட பலர் நீரில் மூழ்கிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.