11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11th Std Public exam cancelled? school education department consultation…

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் மட்டுமே மாநிலம் முழுவதும் ஒரே வகையான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக 11ம் வகுப்புக்கும் பள்ளிகளில்  பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இருந்தாலும் மாநில அளவிலான பொதுத்தேர்வு போல இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் பல தனியார் பள்ளிகள், 11ம் வகுப்பிலேயே மாணாக்கர்களுக்கு 12ம் வகுப்புக்கான பாடங்களை நடத்தி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முழுஅளவிலான தேர்ச்சி பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில்,  அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ள வளாகத்தில் மாநில கல்விக்கொள்கை உருவாக்க கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி  முருகேசன் தலைமையில் குழு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை செய்து வருகிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்த கூட்டத்தில் பேசிய கல்வித்துறை அதிகாரிகள், யானை பசிக்கு சோளப்பொரி கதையாக பள்ளி கல்வி துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில், 11-ம் பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை, அதனால் அந்த தேர்வை ரத்து செய்யலாம் என்று கருத்து தெரிவித்தனர். மேலும்,    டிஎன்பிஎஸ்சிக்கு தன்னாட்சி அதிகாரம் இருப்பது போல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் தேவை என்றுள்ளனர்.

நீட் தேர்வை வெறும் 10,000 மாணவர்கள் எழுதுகிறார்கள். இவர்களுக்காக 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஏற்றார்போல் பாடப்புத்தகம் எழுத வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் 13,000 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த குழுவானது தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடம் கருத்து கேட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு  மத்தியஅரசின்  தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தினாலும், அதனை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து, தமிழகத்திற்கென தனி கல்வி கொள்கையை உருவாக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தனி கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.