முதல் நாளிலேயே வெளியேறிய ஐந்து வீரர்கள்! புயல்வேகத்தில் சரிந்த இங்கிலாந்து


இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்கள் எடுத்துள்ளது

தென் ஆப்பிரிக்காவின் நோர்ட்ஜெ, ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜென்சென் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்

லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்து. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸை 5 ஓட்டங்களிலும், ஸக் க்ரவ்லேவை 9 ஓட்டங்களிலும் ரபடா ஆட்டமிழக்க செய்தார்.

அடுத்து ஜோ ரூட் 8 ஓட்டங்களில் ஜென்சென் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த பேர்ஸ்டோவ் ஓட்டங்கள் எடுக்காமல் நோர்ட்ஜெ பந்துவீச்சில் போல்டானார்.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஓரளவு தாக்குப்பிடித்து 20 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அவரும் நோர்ட்ஜெ பந்துவீச்சில் கீகனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Kagiso Rabada

PC: Twitter

இவ்வாறாக இங்கிலாந்து அணி 100 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை முதல் நாளிலேயே இழந்துள்ளது.

ஒலி போப் மட்டும் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார். இது அவருக்கு 8வது டெஸ்ட் அரைசதம் ஆகும்.  

முதல் நாளிலேயே வெளியேறிய ஐந்து வீரர்கள்! புயல்வேகத்தில் சரிந்த இங்கிலாந்து | Eng Lost5 Wkts Lords Sa First Test2022

PC: Twitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.