ஜோதிகா இல்லனா இந்த வெற்றி சாத்தியமே இல்லை.. விருமன் சக்சஸ் மீட்டில் புகழ்ந்து தள்ளிய சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்திருக்கும் விருமன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இந்திரஜா ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. அதில் நடிகர் சூர்யா பகிர்ந்த தகவல்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.

நட்சத்திர பட்டாளம் இணைந்த விருமன்

நடிகர் கார்த்தி ,அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இந்திரஜா ஷங்கர் என்று நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் தான் விருமன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படம் வெளி வருவதற்கு முன்பே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கு காரணம் இயக்குநர் ஷங்கரின் மகள் இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆவது தான்.

 நல்ல பெயர் கொடுத்த விருமன்

நல்ல பெயர் கொடுத்த விருமன்

முழுக்க முழுக்க கிராமத்து கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வெளிவந்த நாளில் இருந்தே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்துடன் வெளிவந்த பல படங்கள் ஃபிளாப்பான நிலையில், விருமன் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வசூலையும் குவித்து வருகிறது. கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்த பல படங்கள் அவருக்கு கை கொடுத்த நிலையில் இந்த படமும் அவருக்கு கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 எங்கு பார்த்தாலும் அதிதி

எங்கு பார்த்தாலும் அதிதி

விருமன் திரைப்படத்தை கொம்பன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரின் காம்போ வெற்றி காம்போ என்று பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தனது முதல் படத்திலேயே நடிப்பு, நடனம், பாடகி என்று தனது முழு திறமையையும் வெளிக்காட்டியுள்ளார் அதிதி ஷங்கர். நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது.

 சர்ச்சையில் 2டி

சர்ச்சையில் 2டி

எப்பொழுதும் சூர்யா தயாரிக்கும் படத்திற்கு சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் என்று தலைப்பு போட்டு 2டி என்டர்டைன்மென்ட் என்று வெளியிடப்படும். ஆனால் இந்த படத்திற்கு ஜோதிகாவின் பெயரை போடாமல் வெறும் சூர்யா என்று வந்தவுடன் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் ஏதோ பிரச்சனை போல என்று பலரும் முணுமுணுத்து வந்தனர். ஆனால் அப்படி ஏதும் இல்லை என்று சூர்யா ஜோதிகாவின் ரசிகர்கள் கூறிவந்தனர். சமீபத்தில் விருமன் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் நடந்தது. அதில் சூர்யா இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தன் குடும்பத்தினர் என்று கூறியதுடன் ஜோதிகா இல்லை என்றால் நான் இந்த அளவிற்கு சாதித்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

 பெண்கள் தான் காரணம்

பெண்கள் தான் காரணம்

படங்களில் வேலை புரியும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், படத்தின் ஒட்டுமொத்த டீம் இணைந்து வேலை செய்தாலும், குடும்பத்தில் இருந்து கொடுக்கும் சப்போர்ட் தான் ஒருவரை முன்னேற்றி கொண்டு செல்கின்றது. அதேபோல் என் வெற்றிக்கு காரணம் என் குடும்பத்தினர் எனக்கு கொடுக்கும் ஆதரவு என்று தனது குடும்பத்தையும், தனது மனைவி ஜோதிகாவையும் புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகர் சூர்யா. பெண்களுக்கும், பெண்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூர்யாவின் பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்ததுடன் பாராட்டுகளையும் அள்ளி வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.