பாக்.கில் இருந்து ஊடுருவியவர் கைது: துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

ஜம்மு: காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் வாலிபரை ராணுவம் சுட்டு பிடித்தது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர், ரஜோரி மாவட்ட எஸ்பி முகமது அஸ்லாம் கூறுகையில்,‘‘ நவ்சேரா செக்டாரில் எல்லை கட்டுப்பாடு கோட்டில் இருந்து இந்திய பகுதிக்குள் ஒருவர் நுழைய முயற்சித்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர்.  ராணுவ வீரர்கள்  அருகில் சென்ற போது அவர் ஓட துவங்கினார். பின்னர் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

அதன் பிறகு ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு ஊடுருவல்காரரை மடக்கி பிடித்தனர்.  இதில் படுகாயமடைந்த அவரை  ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணையில்  அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை சேர்ந்த தபரிக் உசேன்(32) என்பது தெரியவந்தது. அவர் குணமடைந்த பிறகு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார். அவரிடம் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவிலை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.