விளாடிமிர் புடினை நெருங்கி விட்டார்கள்… எது வேண்டுமானாலும் நடக்கலாம்: விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை


தர்யா டுகினா படுகொலை செய்யப்பட்டது ரஷ்ய அதிகார மையத்தை நடுங்க வைத்துள்ளது.

புடினை எதிரிகள் நெருங்கி விட்டார்கள், இனி கவனமுடன் செயல்பட வேண்டும் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான அதிகாரியின் மகள் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள நிலையில், புடினின் நெருக்கமான வட்டாரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மூளையாக செயல்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரின் மகள் 30 வயதான தர்யா டுகினா என்பவர் மாஸ்கோவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

விளாடிமிர் புடினை நெருங்கி விட்டார்கள்... எது வேண்டுமானாலும் நடக்கலாம்: விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை | Putin Inner Circle Fear Daughter Blown Up

@twitter

இந்த விவகாரத்தில் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விளாடிமிர் புடின் அரசாங்கத்தை வெளியேற்றத் துடிக்கும் அமைப்புகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட அலெக்சாண்டர் டுகின் மீது வைக்கப்பட்ட இலக்கு எனவும், ஆனால் அவர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கடைசி நொடியில், தமது வாகனத்தை மாற்றிக்கொண்டதால், அலெக்சாண்டர் டுகின் உயிர் தப்பியுள்ளார்.
இந்த நிலையில் தர்யா டுகினா படுகொலை செய்யப்பட்டது ரஷ்ய அதிகார மையத்தை நடுங்க வைத்துள்ளது.

விளாடிமிர் புடினை நெருங்கி விட்டார்கள்... எது வேண்டுமானாலும் நடக்கலாம்: விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை | Putin Inner Circle Fear Daughter Blown Up

@Epa

விளாடிமிர் புடினை எதிரிகள் நெருங்கி விட்டார்கள் எனவும், இனி கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மட்டுமின்றி புடின் ஆதரவு ஊடகங்கள் உக்ரைனுக்கு எதிராக கொந்தளித்துள்ளதுடன், உக்ரைன் மீதும் மேற்கத்திய நாடுகள் மீதும் உடனே அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் கோரிக்கை விடுத்தன.

இதனிடையே, தர்யா டுகினா ஓட்டிச் சென்ற டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோவின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதை மாஸ்கோ அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

விளாடிமிர் புடினை நெருங்கி விட்டார்கள்... எது வேண்டுமானாலும் நடக்கலாம்: விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை | Putin Inner Circle Fear Daughter Blown Up

@AP

சம்பவத்தை அடுத்து தமது மகள் காருடன் தீப்பற்றி எரிவதை அலெக்சாண்டர் டுகின் தலையில் கைவைத்தப்படி கதறுவது காணொளியாக வெளியானது.

குறித்த சம்பவம் புடினின் உயர் மட்டத்தை மொத்தமாக அசைத்துப் பார்த்துள்ளது. அடுட்த்ஹ இலக்கு தாமாகவே இருக்கலாம் என பலரும் அச்சம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.