புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த நிதியாண்டில் 10 நாட்கள் கூடிய நிலையில், அமைச்சர்கள் 3.3 கோடி ரூபாய்க்கு வாங்கிய புதிய வாகனங்களின் எரிபொருள் செலவு மட்டும், 70 லட்சம் ரூபாய் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எரிபொருள் செலவினங்கள் இந்த அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநருக்கு மனு தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி பட்ஜெட் 2022-23.. சாமானியர்களுக்கு பயனுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்!

ஆர்டிஐ மூலம் தகவல்
ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, கடந்த ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை கூடிய நாட்கள் எவ்வளவு? அந்த காலகட்டத்தில் அமைச்சர்கள் வாங்கிய புதிய கார்களுக்கான எரிபொருள் செலவு எவ்வளவு என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரியிருந்தார்.

புதிய வாகனங்கள்
கிடைத்த தகவல்கள் படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பொறுப்பேற்ற அரசின் அமைச்சர்கள் பயன்பாட்டிற்கு, பழைய வாகனங்கள் தவிர்த்து 3.3 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

செலவுகள் எவ்வளவு?
புதுச்சேரி முதலமைச்சர் உட்பட 6 அமைச்சர்கள்,சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு கொறடா, முதல்வரின் நாடாளுமன்ற செயலர் ஆகியோரின் வாகனங்களுக்கு எரிபொருள் செலவு மட்டும் 70.12 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நாள் சட்டப்பேரவை?
புதுச்சேரி சட்டப்பேரவை 10 நாட்கள் கடந்த நிதியாண்டில் கூடியுள்ளதாகவும் ஆர்டிஐயில் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையுடன் கூடிய மிகச் சிறிய யூனியன் பிரதேசமாகும். சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் 10 பேரின் வாகனங்களுக்கு, ஓராண்டு எரிபொருள் செலவு 70.12 லட்சம் எனில், ஒருவருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு எரிபொருள் செலவு 58,439 ரூபாய் செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்ல விஷயம் தான்
கடும் நிதி நெருக்கடி உள்ள புதுச்சேரி அரசு மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமலும், பல அரசு பொது நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் ஊதியம் அளிக்க முடியாமலும் தவித்து வருகின்றது. ஆக மக்களின் நலன் கருதியும், அரசின் நிதி நிலையையும் கருத்தில் கொண்டு, எரிபொருள் செலவினம் மற்றும் பிற அனாவசிய செலவினங்களை குறைப்பது நல்ல விஷயம் தானே.
According to RTI information, fuel expenditure of Puducherry Assembly Ministers is Rs.70 lakh
According to RTI information, fuel expenditure of Puducherry Assembly Ministers is Rs.70 lakh/என்னாது கார் எரிபொருளுக்கு மட்டும் இவ்வளவு செலவா.. புதுச்சேரி அமைச்சர்களின் செலவால் அதிர்ச்சி?