புதுடெல்லி: பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகள் படைத்தவர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றது. 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பா கஉள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2023ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பெயர்களை ஆன்லைன் மூலமாக பரிந்துரை செய்தல் மற்றும் முன்மொழிவது தொடங்கியுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி வரை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.