10வது வயதில் அடியெடுத்து வைக்கும் Google play storeன் பத்தாண்டு அசாத்திய பயணம்!

2012இல் துவங்கப்பட்ட Google play store உலகளாவிய ஒரு பயன்பாட்டு செயலியாக வளர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 190 நாடுகளுக்கும் மேல் 2.5 பில்லியன் பயனர்களோடும்,2 மில்லியனுக்கும் அதிகமான ஆப் டெவெலப்பர்களோடும் வெற்றிகரமான ஒரு செயலியாக செயல்பட்டு வருகிறது .கல்வி, மருத்துவம், பண பரிவர்த்தனை, கேமிங், வணிகம் , ஸ்டார்ட்டப்ஸ் , உடல்நலம் என எல்லா துறையிலும் Google play store பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமையல் முதல் சாதனைகள் வரை எப்படி செய்வது என கற்று தர செயலிகள் உள்ள இடமாக திகழ்ந்து வருகிறது Google play store.

கடந்த 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2021இல் இந்திய செயலிகள் மற்றும் கேம்கள் 200% அதிகமான பயனாளர்களை பெற்றுள்ளன. மேலும் 80%அதிகமான நுகர்வோரையும் பெற்றுள்ளன.இதே இந்தியாவுக்கு வெளியில் உள்ள நபர்கள் இந்திய செயலிகளை நுகர்வது 150% அதிகரித்துள்ளது. உலக அரங்கில் செயலிகள் நுகர்வது மற்றும் பயன்பாட்டில் இந்தியா முன்னணி நாடக மாறி வருகிறது. மேலும் செயலிகளை உருவாக்குவதிலும் இந்தியா உலகளாவிய டெவலப்பர் ஹப்பாக மாறியிருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த டெவலப்பர்களுக்கு அதற்கான வழிமுறைகளை போதிப்பதில் முன்னணியில் உள்ளது Google play store. டெவலப்பர்களின் திறமைகளை வளர்பதற்காகவும் , சிறந்த செயலிகளை அவர்கள் உருவாக்குவதற்காகவும் Google play store மூலமாகவே பயிற்சி மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. Play Academy மூலமாக உலகத்தின் எந்த நாட்டையும் விட இந்தியாவை சேர்ந்த டெவெலப்பர்கள் அதிகமாக பயிற்சி பெற்றுள்ளனர். 2018ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை மட்டும் 80ஆயிரம் டெவெலப்பர்கள் Play Academyயில் பயிற்சி பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தினம்தோறும் 125 பில்லியன் செயலிகளை ஸ்கேன் செய்து malware அல்லது தேவையற்ற software களிடமிருந்து பாதுகாக்கிறது. அதே போல் தேவையற்ற இணைய குற்றங்களை செய்யும் செயலிகளை உடனுக்குடன் கண்டறிந்து அவற்றை அதிரடியாக நீக்கும் வேலையையும் செய்கிறது.

இந்நிலையில் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் Google play store செயலிகளில் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுக்க உறுதி அளித்துள்ளது. குறிப்பாக
Google Startup School India
மூலமாக இரண்டாம்,மூன்றாம்கட்ட நகரங்களில் 10,000 ஸ்டார்ட்டப்களை துவங்குவது.
Google for Startups Accelerator – India Women Founder
மூலமாக பிரத்தியேகமாக பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது. பயனாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் பாதுகாப்பின் முழு பாதுகாப்பை நோக்கி செயல்படுவது. அதற்கேற்றவாறு தங்கள் செயலிகள் மற்றும் டூல்ஸை மாற்றி கொண்டே இருப்பது.சிறந்த வணிகம் மற்றும் டெவெலப்பர்களுக்கான உலகளாவிய வாய்ப்பு மற்றும் சூழலை ஏற்படுத்தி தருவது போன்ற பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது Google play store .

அதன் பத்தாவது ஆண்டில் நாமும் சேர்ந்து அதை வாழ்த்துவோம்.

– சுபாஷ் சந்திரபோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.