இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன. வங்கி முதல் பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் என பல முதலீட்டு திட்டங்களும் உள்ளன. ஆனால் இன்றும் சாமானியர்கள் மத்தியில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது அஞ்சலக திட்டங்களுக்கு தான்.
ஏன் என்ன காரணம்? எதற்காக இது சிறந்ததொரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு திட்டங்கள், பாதுகாப்பானதாக பார்க்கப்படுகின்றதே என்ன காரணம்?
செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயனர்களுக்கு பெரும் நிம்மதி!
இறையாண்மை திட்டம்
அஞ்சலக திட்டங்களில் நீண்டகால முதலீடு என்றாலே நினைவுக்கு வருவது பொது வருங்கால வைப்பு திட்டம் தான். இது மக்கள் மத்தியில் மிக பிரபலமானதொரு திட்டமாகவும் உள்ளது. இது தனி நபர்களுக்கு நிலையான ஒரு வருமானத்தை தரும், இறையாண்மை தன்மை கொண்ட முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
யாருக்கு ஏற்றது?
பாதுகாப்பான முதலீடு, முதலீட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, வரி சலுகை, சந்தை அபாயம் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக நீண்டகால இலக்குகளை அடைய இது ஏதுவான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சாதாரண மக்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
பிபிஎஃப் திட்டத்தினை பொறுத்தவரையில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம், 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இது சம்பளதாரர்கள் முதல் சிறு தொழில் செய்வோர், கிக் தொழிலாளர்கள் என அனைவரும் முதலீடு செய்ய ஏற்ற ஒன்றாகும்.
இவ்வளவு வரி சலுகையா?
பிபிஎஃப் நிலையான வருமானத்துடன் கூடிய, EEE (exempt-exempt-exempt) பிரிவின் கீழ் மூன்று வரிச்சலுகையும் பெற முடியும். இதில் முதலீடு செய்யும்போது வரிச் சலுகை கிடைக்கிறது. அதனை திரும்ப பெறும்போதும் வரிச்சலுகை கிடைக்கிறது.
ஆக வரிச் சலுகைக்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு இது சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.
நிரந்த வருமானம்
பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் இதனை விட அதிக வருமானம் கொடுத்தாலும், பல அசாதாரண காலகட்டங்களில் வீழ்ச்சி கண்டு விடுகின்றன. ஆக லாபம் கிடைக்கும் அதே அளவு இதில் ரிஸ்கும் உண்டு. ஆனால் பிபிஎஃப் திட்டம் அப்படி இல்லை, நிலையான வருமானம் தரக்கூடிய ஒரு திட்டம். அது சந்தை சரிந்தாலும், சரியாவிட்டாலும் லாபகரமான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வட்டி நிலவரம்?
தற்போதைய நிலவரப்படி இந்த பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகின்றது. இது சிறு சேமிப்பு திட்டங்களிலேயே அதிக வட்டி கொடுக்கும் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக தேசிய சேமிப்பு பத்திரம், டைம் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களை காட்டிலும் அதிகம்.
ப்ளோட்டிங் ரேட் ஆப்சன்
ஒருவர் பிக்சட் ரேட்டில் முதலீடு செய்தால், வட்டி அதிகரிக்கும் போது பலனை இழக்க நேரிடும். ஆனால் பிபிஎஃப் திட்டத்தில் அப்படி இல்லை, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அரசு வட்டியை மாற்றுகிறது. ஆக வட்டி அதிகரிக்கும்போது அதன் பலனை பெறலாம். அதேசமயம் வட்டி குறையும்போது லாபம் குறையலாம்.
கூட்டு வட்டியின் அசுர வளர்ச்சி
பிபிஎஃப் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இதனை முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் கூட்டு வட்டியின் மூலம் மிகப்பெரிய லாபத்தினை பெறலாம். இது எதிர்பார்க்காத லாபகரமான ஒன்றாகவும் இருக்கும்.
வட்டி அதிகம்
இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் கூட அதிகபட்சமாக பிக்சட் டெபாசிட்களுக்கு 5.5% வரையில் வட்டி கொடுக்கின்றன. எனினும் வரிச்சலுகை இருக்காது. ஆனால் பிபிஎஃப் அப்படி இல்லை. வட்டியும் அதிகம். வரி சலுகையும் உண்டு. மொத்தத்தில் முதலீட்டாளர்களின் இந்த திட்டத்தினை விரும்ப இது லாபகரமான ஒன்றாக உள்ளது.
Why Public Provident Fund Scheme is People’s Favorite Investment?
Why Public Provident Fund Scheme is People’s Favorite Investment?/ஏன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மக்களின் பெஸ்ட் சாய்ஸ்.. உங்களுக்கு தெரியுமா?