பெரம்பலூரில் மருந்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம், புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அஸ்வின் கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் சவுகத்அலி தலைமை தாங்கினார். சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் குருநாதன், பெரம்பலூர், அரியலூர் சரக மருந்துகள் ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நார்கோடிக் மருந்துகளை விற்பனை செய்யும் முறைகள் பற்றி ஆலோசனைகளை வழங்கினர். நார்கோடிக் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மருந்துகள், போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மருந்துகளை கையாலும் முறைகள், பராமரிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருந்து வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூர்
Related Tags :