அமேசான் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞர்களின் கனவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனத்தில் பணி கிடைத்து விட்டால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்றும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்பது தெரிந்ததே.
உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிய பலர் விரும்பும் நிலையில் அமேசான் வேலைவாய்ப்பு குறித்து பல விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் கொடுத்த முதல் விளம்பரம் குறித்த தகவல் தற்போது புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது. 28 ஆண்டுகளுக்கு முன் அவர் கொடுத்த இந்த விளம்பரம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
தமிழகத்தில் ரூ. 2,250 கோடி முதலீடு…. உலக அரங்கில் மேக் இன் தமிழ்நாடு!

அமேசானின் முதல் விளம்பரம்
1994 ஆம் ஆண்டில், அப்போது அதிகம் அறியப்படாத தொழிலதிபரான ஜெஃப் பெசோஸ், அமேசானின் முதல் பணியமர்த்தலுக்கான வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தை வெளியிட்டார்.

28 ஆண்டுகளுக்கு முந்தைய விளம்பரம்
28 ஆண்டுகளுக்கு முன்பு ஜெப் பெசோஸ் ஒரு ஈ-காமர்ஸ் நிறுவனத்தை தொடங்குவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்தார். அதன்பின் அவர் தனது நிறுவனத்திற்காக வேலைக்கு ஆள் வேண்டும் என்ற விளம்பரத்தை வெளியிட்டார். இந்த விளம்பரம் தற்போது ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வேலைவாய்ப்பு
ஜெப் பெசோஸ் கொடுத்த வேலைவாய்ப்பு விளம்பரத்தின் ஸ்கிரீன்ஷாட்டின் படி, பணியில் சேர விரும்புபவர் சிக்கலான அமைப்புகளை திறமையாக கையாள்பவராக இருக்க வேண்டும் என்றும், கணினி அறிவியலில் BS, MS, அல்லது PhD பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சிறந்த தகவல்தொடர்பு திறன் அவசியம் என்றும், இணைய சேவையகங்கள் மற்றும் HTML தெரிந்திருப்பது உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பெயர் இல்லை
இந்த விளம்பரத்தை ஜெப் பெசோஸ் கொடுக்கும்போது அவர் தனது நிறுவனத்திற்கு அமேசான் என்ற பெயரை வைக்கவில்லை. அவர் தனது நிறுவனத்திற்கு Awake.com,” “Browse.com” அல்லது “Relentless.com” ஆகிய பெயர்களை பரிசீலனை செய்த நிலையில் இறுதியில் அமேசான் என்ற பெயரை அவர் தேர்வு செய்தார்.

ஆன்லைனில் புத்தகங்கள்
ஜெப் பெசோஸ் தனது வேலைவாய்ப்பு விளம்பரத்தை வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்குள், அமேசான் நிறுவனம் ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்ய தொடங்கியது. அதன்பின் படிப்படியாக வளர்ந்து இன்று ஈ-காமர்ஸ் நிறுவனங்களில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.
The First Job Listing Jeff Bezos Ever Posted For Amazon, From 28 Years Ago
The First Job Listing Jeff Bezos Ever Posted For Amazon, From 28 Years Ago | 28 ஆண்டுகளுக்கு முன் ஜெப் பெசோஸ் கொடுத்த விளம்பரம்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்