இபிஎஸ் இடம் தூது போகும் பிரபல இயக்குநர்!- ஓபிஎஸ்ஸுக்காகவா, பாஜகவுக்காகவா?

சென்னையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே கட்சியில் தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பை அளித்தது. இதனயைடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரான

. இணைந்து செயல்படுவோம் வாருங்கள் என்று இபிஎஸ் அன்கோவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகிறார்.

ஆனாலும் அவரது அழைப்பை இபிஎஸ் கேட்பதாக தெரியவில்லை.அத்துடன் ஓபிஎஸ் உடன் இனி இணைந்து செயல்பட முடியாது என்று நீதிமன்றத்திலேயே திட்டவட்டமாக தெரிவித்தும்விட்டார். இதனால் அதிமுக இன்னும் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தே உள்ளது.

இந்த நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை சென்னையில் இந்து திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் சிறப்பாக வழிநடத்தப்பட்ட அதிமுகவுக்கு திருஷ்டி பரிகாரம் போல் தற்போது சோதனை வந்துள்ளது.

இந்த சோதனையில் இருந்து மீண்டு அதிமுக மீண்டும் பழைய பலத்துடன் இயங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அனைவரையும் ஒருங்கிணைக்க என்னால் இயன்ற பணிகளை மேற்கொள்வேன். இதற்காக விரைவில் முறைப்படி அதிமுகவில் இணைய உள்ளேன். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட அவருக்கு அழைப்பு விடுப்பேன்’ என்று பாக்யராஜ் கூறினார்.

சில மாதங்களுக்கு முன் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாக்யராஜ், ‘பிரதமர் மோடியை விமர்சித்து வருபவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்;நல்லவர்கள் அவரை பற்றி தவறாக பேசமாட்டார்கள்’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் இபிஎஸ்ஸை சந்தித்து பேசுவேன் என கூறியுள்ளது ஓபிஎஸ்ஸுக்காகவா, பாஜகவுக்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.