மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனைப் பற்றிய நெருப்பு படைப்பே \"மாவீரா\"

சென்னை : சின்னத்திரையில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரை இயக்கிய வ கௌதமன் இயக்கத்தில் உருவாக உள்ளத்திரைப்படம் மாவீரா.

மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான வ.கௌதமன், 1999 ஆம் ஆண்டு முரளி மற்றும் சிம்ரன் நடித்த கனவே கலையாதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார்.

இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து, மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் நடிகராகவும் மாறினார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார்.

இயக்கநர் வ கௌதமன்

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு படத்தை இயக்க உள்ளதாக இயக்குர் வ கௌதமன் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு மாவீரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வி.கே புரடக்க்ஷன் குழுமம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு படத்தை பார்க்கும் ஒவ்வொருவரையும் திரைப்படத்தோடு தொடர்புப்படுத்தி கொள்ள செய்யும் வகையில் படம் இருக்கும் என இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.

மாவீரானின் வரலாறு

மாவீரானின் வரலாறு

மேலும், சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடு பகுதிகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு ஒரு தரிசனமாக, சமரசமில்லா படைப்பாக்கி தருவதே என் என் வாழ்நாளில் லட்சியமாக வைத்து இருப்பதாக கூறினார். மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வீரவரலாறே மாவீரா திரைப்படத்தின் கதை என்றார்.

கவிப்பேரரசுக்கு நன்றி

கவிப்பேரரசுக்கு நன்றி

மேலும் தொடர்ந்து பேசிய, இயக்குநர் வ கௌதமன் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். பூமிப்பந்தின் ஆதிக்குடி எனத் தொடங்கும் பாடலை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அடித்து ஆடிப்பாடும் பாடலாக எழுதித்தந்து எனது அனைத்துப் படைப்புகளுக்கும் தோளோடு தோள் நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் நன்றி என்றார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரனும், சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும், படத்தொகுப்பை ராஜாமுகமதுவும் மேற்கொள்ள உள்ளனர். படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகையின் தேர்வு விரைவில் தொடங்க உள்ளதாகவும் படம் குறித்த அறிவிப்பு விரைவில், வெளியிடப்படும் என்றும் வ கௌதமன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.