சாகர் : மத்திய பிரதேசத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை, 24 மணி நேரத்தில் போலீசார் கைப்பற்றினர். ம.பி.,யின் சாகர் மாவட்டத்தில் இருந்து நேற்று ஹரியானா நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி சென்றது. அதில், 12 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் இருந்தன.
லாரி மஹராஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, நான்கு பேர் வழிமறித்து அதை கடத்தியுள்ளனர். பின், டிரைவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இறக்கிவிட்டு, கன்டெய்னர் லாரியில் இருந்த போன்களை மற்றொரு கன்டெய்னர் லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:இந்த சம்பவம் குறித்து, அந்த வழியாகச் சென்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டிரைவர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம்.
கொள்ளையர்கள் லாரி டிரைவரை கடத்திச் சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இறக்கிவிட்டுள்ளனர். தீவிர விசாரணைக்குப் பின், குற்றம் நடந்த இடத்திலிருந்து 400 கி.மீ., தொலைவில், இந்துார் அருகே வேறொரு கண்டெய்னரில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மொபைல் போன்களை மீட்டோம்; தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏ.டி.எம்.,மை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை
பஞ்சாபின் ஹோஷியார்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த ஏ.டி.எம்., இயந்திரத்தை, ‘கேஸ் கட்டர்’ வாயிலாக உடைத்து, 17 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவி மேலாளர் கூறுகையில், ‘இந்த சம்பவம் நேற்று அதிகாலை நடந்தது. காரில் வந்த கொள்ளையர்கள், ஏ.டி.எம்.,மை உடைத்து 17 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளனர். ‘சிசிடிவி’ பதிவுகளை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்’ என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement