Tamil News Live Update: முதல்வர் ஸ்டாலினுடன் ஸ்ரீமதியின் பெற்றோர் சந்திப்பு

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆளுமை விருதுகள்: செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்!

காங்கிரஸில் இருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இது தொடா்பாக கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு வெள்ளிக்கிழமை அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

73 வயதான குலாம் நபி ஆசாத், 1980ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மாறி தேசிய அரசியலுக்குள் நுழைந்தார். மாநிலங்களவை உறுப்பினராக  21 ஆண்டுகள் பதவி வகித்துள்ள ஆசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக 7 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்துள்ளார். 

9 முறை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாத், காங்கிரஸ் காரியக் கமிட்டியில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்துள்ளார். இப்படி தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு சிக்கல்களை தீர்த்து வைத்த குலாம் நபி ஆசாத்,  தற்போது கட்சியிலிருந்து விலகி உள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கி, அடுத்த மாதம்11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் A B என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங் ஹாங் அணிகளும் மற்றும் B பிரிவில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்று உள்ளன.

இதன் முதல் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஞாயிறு நடைபெறும் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
11:20 (IST) 27 Aug 2022
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை – அரசாணை

சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

11:17 (IST) 27 Aug 2022
முதல்வர் ஸ்டாலினுடன் ஸ்ரீமதியின் பெற்றோர் சந்திப்பு

சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஸ்ரீமதியின் பெற்றோர் சந்திப்பு

ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில் முதல்வருடன் சந்திப்பு

10:49 (IST) 27 Aug 2022
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை, ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி, ஸ்டாலினிடம் வழங்கினார்.

10:48 (IST) 27 Aug 2022
நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்

நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் செப்.1ம் தேதி முதல் ஜனவரி 23ம் தேதி வரை மீண்டும் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,

10:47 (IST) 27 Aug 2022
யு.யு.லலித் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

09:20 (IST) 27 Aug 2022
வைகை அணையில் தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 2,000 கன அடி நீர் ஆற்றில் வெளியேறி வருவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப் பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

08:09 (IST) 27 Aug 2022
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார். இருப்பினும் யு.யு.லலித், 3 மாதங்களுக்கு குறைவாக மட்டுமே தலைமை நீதிபதி பதவியை வகிப்பார். அவா் வரும் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

08:09 (IST) 27 Aug 2022
இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீக்கம்

இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடையை பீபா நீக்கியது. திட்டமிட்டபடி U17 மகளிர் உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தலாம் என அறிவித்துள்ளது.

08:09 (IST) 27 Aug 2022
ஜுடோ போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

கேடட் உலக சாம்பியன்ஷிப் 2022 ஜுடோ போட்டியில் 57 கிலோ பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த 16 வயது லிந்தோய் சனம்பம், பிரேசிலை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம் ஜூடோவில் உலக சாம்பியனான முதல் இந்தியர் என்ற பெருமையை லிந்தோய் பெற்றுள்ளார்.

08:08 (IST) 27 Aug 2022
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போயஸ் இல்ல பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலா உறவினர்கள் என மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் இன்று தாக்கல் செய்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.