செல்வராகவன் நடிப்பில் மிரட்டலாக வெளியானது 'பகாசுரன்' பட டீசர்!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர்  இயக்குனர் மோகன் ஜி. தற்போது இவரது இயக்கத்தில் ‘பகாசுரன்’ படம் உருவாகியுள்ளது, இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் மற்றும் நட்டி ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இயக்குனரான செல்வராகவன் தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார், பீஸ்ட் படத்தில் இவரது நடிப்பு பாராட்டை பெற்றது.  சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் செல்வராகவன் கொஞ்சம் மிரட்டலான தோற்றத்தில் சிவ பக்தர் போல காட்சியளித்திருந்தார்.  அந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்த இவரது தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது.

 

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  இதில் எதிரிகளை கொலை செய்பவராக செல்வராகவன் மிரட்டலாக காட்சியளிக்கிறார், நட்டி கொலைகளுக்கான காரணங்களை கண்டறியும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக காட்சியளிக்கிறார்.  இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை வைத்து பார்க்கும்பொழுது காதல் எனும் மாயவலையில் சில கயவர்கள் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி சீரழிப்பது தொடர்ப்பதாக கதை அமைந்திருக்கிறது என்று புலப்படுகிறது.  அவ்வாறு பெண்களின் வாழ்க்கையை நாசமாக்குபவர்களை செல்வராகவன் தண்டிக்கிறாரரோ என்று தோன்றுகிறது.  இதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக குழந்தைகள் கதவை பூட்டிக்கொண்டு அவர்களது செல்போனில் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனித்தால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்று நட்டி கூறும் வசனம் அமைந்துள்ளது.

ஏற்கனவே மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி படமும் நாடக காதலை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இந்த படத்தில் ராதாரவி, தாராக்ஷி, தேவதர்ஷினி, ராஜன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  மேலும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இணையமைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.