நான்கு குழந்தைகளுடன் காரை திருடிய நபர்…ஐந்திற்கும் மேற்பட்ட குற்றங்களில் தேடப்படும் குற்றவாளி என அறிவிப்பு!


குழந்தைகளுடன் காரை திருடிய மர்ம நபரால் பரபரப்பு.


ஐந்து குற்றங்களுக்காக தேடுப்படுகிறார் என பொலிஸார் அறிவிப்பு

நான்கு குழந்தைகளுடன் வாகனத்தை திருடிய வழக்கில் சந்தேக நபரான 35 வயதான மேத்யூ மிண்டனின் அடையாளத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உணவு டெலிவரி டிரைவராக பணிபுரியும் நான்கு குழந்தைகளின் தாய் கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி ராக்கி பாயிண்ட் டிரெயி மற்றும் போட் கிளப் சாலைக்கு அருகிலுள்ள வணிக வளாகத்தில் உணவு ஆர்டரை எடுக்க தனது எஸ்யூவியை பார்க் செய்து விட்டு கடைக்குள் சென்றுள்ளார்.

காரின் கதவினை தாய் பூட்ட மறந்த நிலையில், தாய் வாகனத்தை விட்டு விலகியிருந்த போது, திடீரென மர்ம நபர் ஒருவர் காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை ஓட்டத் தொடங்கியுள்ளார்.

நான்கு குழந்தைகளுடன் காரை திருடிய நபர்...ஐந்திற்கும் மேற்பட்ட குற்றங்களில் தேடப்படும் குற்றவாளி என அறிவிப்பு! | Usa Texas Who Stole Vehicle Four Children Inside

சிறிது நேரத்தில் காரில் குழந்தைகள் இருப்பதை உணர்ந்த மர்ம நபர், வாகனத்தை திருடிய அரை மைல் தொலைவில் உள்ள டாலர் ஜெனரல் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தப்பி ஓடியதாக காவல்துறை துப்பறிவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் காயம் எதுமின்றி மீட்கப்பட்டு தாயுடன் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் ஆகஸ்ட் 19ம் திகதி நான்கு குழந்தைகளுடன் காரை கடத்திய மர்ம நபர் 35 வயது மதிக்கதக்க மேத்யூ மிண்டன் என பொலிஸார் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை கையில் வைத்து பிரச்சாரம் செய்த ரஷ்ய கூலிப்படை! பரபரப்பு வீடியோ

மேலும் மிண்டன் ஐந்து குற்றங்களுக்காக தேடப்படுகிறார் என்று போலீசார் தெரிவித்தனர்

மிண்டனின் இருப்பிடத்தை அறிந்தவர்கள் லேக் வொர்த் துப்பறியும் அதிகாரிகளை [email protected] என்ற முகவரியில் அல்லது (817) 237-1224 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.