வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி.. இன்னைக்கு மட்டுமே நிஜம்.. கருத்து சொன்ன மீனா!

சென்னை
:நடிகை
மீனா
தனது
சிறிய
வயதில்
இருந்தே
முன்னணி
நடிகர்களுடன்
இணைந்து
நடித்து
வருபவர்.

இளம்
நடிகையாக
ஏராளமான
ரசிகர்களை
கவர்ந்த
இவர்,
தற்போதும்
முன்னணி
நடிகர்களுடன்
இணைந்து
நடித்து
வருகிறார்.

சமீபத்தில்
இவரது
கணவர்
வித்யா
சாகர்
மரணமடைந்த
நிலையில்,
இதுவரை
மீண்டும்
சூட்டிங்கில்
பங்கேற்காமல்
உள்ளார்.

நடிகை
மீனா

நடிகை
மீனா
அன்புள்ள
ரஜினிகாந்த்
உள்ளிட்ட
படங்களில்
சிறுமியாக
நடித்தவர்.
இந்தப்
படங்களிலேயே
தன்னுடைய
அழகான
நடிப்பு
மற்றும்
சிரிப்பால்
ஏராளமான
ரசிகர்களை
கவர்ந்தவர்.
அன்புள்ள
ரஜினிகாந்த்
படத்தில்
மாற்றுத்
திறனாளி
சிறுமியாக
நடித்து
தன்னுடைய
அழுத்தமான
நடிப்பால்
அனைவரையும்
வியப்பில்
ஆழ்த்தினார்
மீனா.

நாயகியாக என்ட்ரி

நாயகியாக
என்ட்ரி

தொடர்ந்து
சில
ஆண்டுகளில்
மீண்டும்
நாயகியாக
என்ட்ரி
கொடுத்தார்
மீனா.
என்
ராசாவின்
மனதிலே
படத்தில்
ராஜ்கிரணுக்கு
ஜோடியாக
நடித்திருந்தார்.
கரடுமுரடான
ராஜ்கிரணுக்கு
மனைவியாகும்
மீனா,
அவரை
கண்டு
பயப்படும்
தருணங்களில்
நிஜ
கேரக்டராகவே
மாறினார்.
சிறு
வயதிலேயே
நடிக்கத்
துவங்கியதாலோவோ
என்னவோ
இவருக்கு
இது
முதல்
படம்
போலவே
இருக்காது.

ரஜினியுடன் ஜோடி

ரஜினியுடன்
ஜோடி

இந்தப்
படம்
இவருக்கு
சிறப்பான
அறிமுகத்தை
கொடுத்த
நிலையில்,
எடுத்த
எடுப்பிலேயே
ரஜினியுடன்
ஜோடி
சேர்ந்தார்.
வைத்தீஸ்வரி
என்ற
கேரக்டரில்
இவர்
நடித்திருந்த
நிலையில்,
இந்தக்
கேரக்டரும்
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்தது.
தொடர்ந்து
சரத்குமார்,
கமல்ஹாசன்
என
முன்னணி
ஹீரோக்களுடன்
ஜோடி
போட்டார்.

விஜய்யுடன் நடித்த நைனிகா

விஜய்யுடன்
நடித்த
நைனிகா

ஒரு
கட்டத்தில்
வித்யாசாகர்
என்ற
சாப்ட்வேர்
இன்ஜினீயரை
மணந்துக்
கொண்டு
செட்டில்
ஆன
மீனாவிற்கு
நைனிகா
என்ற
மகளும்
உள்ளார்.
புலிக்கு
பிறந்தது
பூனையாகாது
என்பதை
விஜய்யுடன்
தெறி
படத்தில்
நடித்து
நைனிகா
நிரூபித்தார்.
வாழ்க்கை
மிகவும்
அழகானது
என்று
கடந்த
ஆண்டு
தன்னுடைய
திருமண
நாளில்
பதிவிட்டிருந்தார்
மீனா.

உயிரிழந்த வித்யாசாகர்

உயிரிழந்த
வித்யாசாகர்

ஆனால்
வாழ்க்கை
ஒரு
வட்டம்
என்பதை
இவருடைய
வாழ்க்கையும்
நிரூபித்தது.
சமீபத்தில்
இவரது
கணவர்
வித்யாசாகர்
மல்ட்டி
ஆர்கன்
பெயிலியரால்
பாதிக்கப்பட்டு
உயிரிழந்தார்.
இவரது
பிரிவு
மீனாவை
முடக்கியுள்ளது.
ஆனால்
சிறிது
சிறிதாக
வெளியில்
வரத்
துவங்கியுள்ளார்
மீனா.
சமூக
வலைதளங்களில்
பதிவுகளை
போட்டு
வருகிறார்.

கைக்கொடுக்கும் தோழிகள்

கைக்கொடுக்கும்
தோழிகள்

இவரது
சக
சினிமா
தோழிகளும்
இவருக்கு
உறுதுணையாக
இருந்து
வருகின்றனர்.
சங்கவி,
சங்கீதா
உள்ளிட்ட
சினிமா
தோழிகள்
சமீபத்தில்
மீனாவை
அவரது
வீட்டில்
சந்தித்து
ஆறுதலாக
இருந்தனர்.
இவர்களின்
பொழுது
அன்றைய
தினம்
சிறப்பாக
அமைந்தது.
மீனாவின்
முகத்திலும்
சிரிப்பை
காண
முடிந்தது.

மீண்டு வரும் மீனா

மீண்டு
வரும்
மீனா

தொடர்ந்து
நடிகை
ராதிகாவின்
பிறந்தநாள்
கொண்டாட்டத்திற்கு
வாழ்த்துக்களை
பதிவு
செய்த
மீனா,
அவரது
வீட்டில்
நடைபெற்ற
பிறந்தநாள்
கொண்டாட்டத்திலும்
கலந்துக்
கொண்டார்.
இவ்வாறு
தன்னுடைய
இழப்பிலிருந்து
தன்னை
சிறிது
சிறிதாக
மீட்டு
வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு

இன்ஸ்டாகிராமில்
புதிய
பதிவு

இந்நிலையில்
இன்றைய
தினம்
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
புதிய
பதிவொன்றை
போட்டுள்ளார்.
அதில்
அவர்
குழந்தை
நட்சத்திரமாக,
இளவயதாக,
மிடில்
ஏஜில்
மற்றும்
தற்போதைய
நிலையில்
என
4
பருவங்களாக
புகைப்படங்களை
பதிவிட்டுள்ள
மீனா,
வாழ்க்கை
ஒரு
ரோலர்
கோஸ்டர்
போன்றது
என்றும்
அதை
வாழுமாறும்
குறிப்பிட்டுள்ளார்.
இன்று
மட்டுமே
நிஜம்
என்றும்
தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.