ஃபேஷனை பொறுத்தவரை, அதற்கு வரையறையே கிடையாது. ஆடை முதல் அக்ஸசரீஸ் வரை, ஏதாவது வித்தியாசமாக இருந்தால்போதும், பெரும்பாலான மக்களுக்கு அதை வாங்கவேண்டும் என்ற எண்ணம் அதிக அளவில் இருக்கும். அதனால் மக்களின் மனநிலைக்கேற்ப பல நிறுவனங்கள் பொருட்களை தயாரிப்பதுண்டு. அந்தவகையில் ஃபேஷன் பிராண்டான Balenciaga என்ற பிரபல நிறுவனம் ஒன்று ஷூலேஸ் மாடலில் புதிய காதணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வெள்ளியில் கொக்கி, மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் மற்றும் பருத்தியில் ஷூ லேஸ். இரண்டையும் இணைத்து அந்த காதணியைத் தயாரித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

If you don’t see the beauty in the Balenciaga trash bag you just don’t understand fashion. It only costs $1,790. pic.twitter.com/eWP7XbzBB5
— ADM87 (@adm87) July 31, 2022
ஃபேஷன் பிராண்டான Balenciaga இந்த காதணியை 261 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 20,847 ரூபாய் ஆகும். Highsnobiety என்ற குளோபல் பேஷன் மீடியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புதிய வகை காதணிகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இந்த காதணிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் 1790 டாலர்களுக்கு Trash Pouch என்ற குப்பை பையை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.