அமெரிக்க மில்லியனர்களை புரட்டி போட்ட 8 நிமிட பேச்சு.. $12 பில்லியன் நஷ்டம்!

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் என்பவர் 8 நிமிடம் உலக நாணய கொள்கை வகுப்பாளர்களின் கூட்டத்தில் பேசினார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று அவரது பேச்சில் தெளிவுபடுத்தியது.

இந்த எட்டு நிமிட பேச்சு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் உள்பட எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் ஆகிய இருவருடைய சொத்து மதிப்பு 12 பில்லியன் அளவுக்கு குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈஷா அம்பானி: முக்கிய முடிவு எடுக்கப்போகும் முகேஷ் அம்பானி..!

ஜெரோம் பவல்

ஜெரோம் பவல்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் உலக நாணய கொள்கை வகுப்பாளர்களின் கூட்டத்தில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் என்பவர் 8 நிமிடங்கள் உரையாற்றினார்.

வட்டி விகிதம் உயர்வு

வட்டி விகிதம் உயர்வு

இந்த உரையில் அவர் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என்றும் பெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த எட்டு நிமிட பேச்சு அமெரிக்காவின் பங்கு வர்த்தகத்தை புரட்டி போட்டது.

அமெரிக்க பங்குச்சந்தை
 

அமெரிக்க பங்குச்சந்தை

முக்கியமாக மூன்று முக்கிய குறியீடுகளான டவ் ஜோன்ஸ், எஸ்&பி மற்றும் நாஸ்டாக் ஆகியவை கடந்த வெள்ளியன்று 3 சதவீதம் இறங்கியது என்பதும் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தலைவர்களின் 8 நிமிட பேச்சு காரணமாக அமெரிக்கா பில்லியனர்களின் மதிப்பு பெரும் அளவில் குறைந்துள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சொத்து மதிப்பு 5.5 பில்லியன் டாலர் குறைந்ததாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிலவரப்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 254 பில்லியன் என இருந்த நிலையில் அவரது மதிப்பு பெரும் சரிவை கண்டது.

ஜெஃப் பெசோஸ்

ஜெஃப் பெசோஸ்

அதேபோல் உலகின் இரண்டாவது பெரும் பணக்காரரான அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் தனது சொத்து மதிப்பில் 6.8 பில்லியன் டாலர்களை இழந்தார் என்று கூறப்படுகிறது. அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் மற்றும் பங்குச் சந்தை நிபுணர் வாரன் பஃபெட் ஆகியோர்களின் சொத்து மதிப்பும் தலா 2.2 பில்லியன் மற்றும் 2.7 பில்லியன் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Powell’s 8 minute speech erases $12 billion from Elon Musk, Jeff Bezos’ wealth

Powell’s 8 minute speech erases $12 billion from Elon Musk, Jeff Bezos’ wealth | அமெரிக்க மில்லியனர்களை புரட்டி போட்ட 8 நிமிட பேச்சு.. $12 பில்லியன் நஷ்டம்

Story first published: Monday, August 29, 2022, 12:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.