சென்னை
:
விஜய்
டிவியின்
முன்னணி
தொடரான
பாக்கியலட்சுமி,
புத்தம்
புதிய
எபிசோட்களுடன்
ரசிகர்களை
சந்தித்து
வருகிறது.
மூன்று
லீட்
கதாபாத்திரங்கள்,
அவர்களுக்கிடையில்
விளையாடும்
காதல்,
உணர்வுகளின்
சங்கமம்
என
அடுத்தடுத்த
ட்விஸ்ட்களுடன்
கதை
சென்றுக்
கொண்டிருக்கிறது.
கோபிக்கு
பாக்கியா
கொடுத்த
விவாகரத்தால்
கொஞ்சமும்
அவர்
வருத்தப்படவில்லை.
இதற்குத்தானே
காத்திருந்தேன்
என்பது
போல
ராதிகாவுடனான
காதலை
புதுப்பிக்க
சென்றுவிட்டார்.
பாக்கியலட்சுமி
தொடர்
விஜய்
டிவியின்
முன்னணி
தொடரான
பாக்கியலட்சுமி
அடுத்தடுத்த
சிறப்பான
எபிசோட்களை
ரசிகர்களுக்கு
தந்து
வருகிறது.
கோபி,
ராதிகா
மற்றும்
பாக்கியாவிற்கு
இடையில்
காதல்
விளையாடும்
விளையாட்டை
மையமாக
கொண்டு
இந்தத்
தொடர்
அடுத்தடுத்த
கதைக்களத்தில்
ரசிகர்களை
சந்தித்து
வருகிறது.

பாக்கியா
கொடுத்த
விவாகரத்து
ராதிகாவுடனான
தனது
காதலை
புதுப்பித்த
கோபி,
அதை
வீட்டிற்கு
தெரியாமல்
இருக்க
பல
தகிடுதத்தங்களை
அரங்கேற்றினார்.
ஒரு
கட்டத்தில்
இந்த
உண்மை
ராதிகா,
பாக்கியா
மற்றும்
குடும்பத்தினருக்கு
தெரியவர,
அல்லாடிப்
போனார்.
குற்றவாளி
கூண்டில்
ஏற்றப்பட்டார்.
இந்தக்
கதையில்
புதிய
ட்விஸ்டாக
அவர்
கேட்ட
விவாகரத்தை
பாக்கியா
கொடுத்தார்.

வீட்டிலிருந்து
வெளியேறிய
கோபி
தொடர்ந்து
வீட்டிலிருந்தும்
வெளியேற்றப்பட்டார்.
அப்போதாவது
தனது
குடும்பம்
குறித்து
யோசிப்பார்
என்று
பார்த்தால்,
ராதிகாவுடனான
தனது
காதலை
தொடர
சென்றுவிட்டார்
மனிதர்.
ராதிகாவால்
தான்
தன்னுடைய
குடும்பம்
உள்ளிட்ட
அனைத்தையும்
இழந்து
விட்டதாகவும்,
இருவரும்
திருமணம்
செய்துக்
கொள்ளலாம்
என்றும்
கூறுகிறார்.

பாக்கியா
குறித்து
பேசிய
ராதிகா
தொடர்ந்து
தான்
கோபியுடன்
இணைந்து
வாழவே
விரும்புவதாகவும்
ஆனால்
தனக்கு
யோசிக்க
சிறிது
சந்தர்ப்பம்
வேண்டும்
என்றும்
ராதிகா
கூறுகிறார்.
தொடர்ந்து
டீச்சர்
பாக்கியாதான்
கோபியின்
மனைவி
என்பது
முன்னமே
தெரிந்திருந்தால்,
அவர்களுக்குள்
விவாகரத்து
நடக்கவே
தான்
விட்டிருக்க
மாட்டேன்
என்றும்
கூறுகிறார்.

பாக்கியா
டீச்சர்
இல்லை
டார்ச்சர்
இதனால்
ஆத்திரமடையும்
கோபி
பாக்கியா
டீச்சர்
இல்லை,
டார்ச்சர்
என்று
கூறுகிறார்.
அவளால்தான்
தான்
இப்போது
வீட்டை
விட்டு
வெளியில்
வந்து
அனாதையாக
இருப்பதாகவும்
கோபத்தை
வெளிப்படுத்துகிறார்.
எப்போதும்
பாக்கியாவின்
பக்கமிருந்து
யோசிக்காமல்
தன்னுடைய
பக்கத்து
நியாயத்தையும்
பார்க்கும்படியும்
கோபி
ராதிகாவிடம்
கூறுகிறார்.

பூர்த்தியாகாத
எதிர்பார்ப்பு
எல்லா
ஆண்களுக்கும்
பெண்களுக்கும்
தன்னுடைய
துணை
குறித்த
எதிர்பார்ப்பு
இருக்கும்
என்றும்
ஆனால்
தன்னுடைய
எந்த
எதிர்பார்ப்பையும்
பாக்கியா
பூர்த்தி
செய்யவில்லை
என்றும்
கோபி
தெரிவித்தார்.
இத்துடன்
இன்றைய
எபிசோடின்
ப்ரமோ
நிறைவடைகிறது.
இன்றிரவு
ஒளிபரப்பாகும்
தொடருக்காக
ரசிகர்கள்
ஆர்வமுடன்
காத்திருக்கின்றனர்.