உணவு உட்கொண்ட பிறகு வாக்கிங் செய்யலாமா? நன்மை உண்டா?


பொதுவாகவே வாக்கிங் செல்வதால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன.

அதிலும் உணவு உட்கொண்டவுடன் சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது.

உணவு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

உணவு உட்கொண்ட பிறகு வாக்கிங் செய்யலாமா? நன்மை உண்டா? | Can You Walk After Eating

image – Shutterstock 

நன்மைகள்

  • உணவை உட்கொண்டவுடன் நடப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
  • உணவு விரைவாக ஜீரணமாக உதவுகிறது.
  • உணவுக்குப் பிறகு தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதால் உடல் எடை குறைகிறது.
  • உணவு சாப்பிட்ட பிறகு நடப்பதால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது.
  • வளர்சிதை மாற்றமும் பலப்படுத்தப்படுகிறது.
  • உணவைச் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • இது நல்ல இரவு உறக்கத்துக்கு வழிவகுக்கிறது.
  • உணவு உட்கொண்ட பிறகு தினமும் நடப்பதால், தசைகள் சரியாக வேலை செய்யும்.
  • இதன் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.
  • சாப்பிட்ட பிறகு நடப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
  • டைப் 2 நீரிழிவு நோயாளிகள் உணவுக்குப் பிறகு சிறிது நேரம் கண்டிப்பாக நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.