பிலாஸ்புர் : ‘கணவரின் அலுவலகம் சென்று, பலருக்கு முன் அவரை திட்டுவதும் கொடுமைபடுத்துவதற்கு சமம் தான்’ என, விவாகரத்து வழக்கில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த, 31 வயது நபர், அரசு பணியில் உள்ளார். கடந்த 2010ல், ராய்ப்பூரைச் சேர்ந்த, 34 வயது விதவையை அவர் திருமணம் செய்தார். அந்த நபர் தொடர்ந்த வழக்கில், ராய்ப்பூர் குடும்ப நீதிமன்றம், அவருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து, அந்தப் பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்குப் பின், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாவது:குடும்ப நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளது. அதில் தலையிட விரும்பவில்லை.கணவரின் அலுவலகத்துக்கு சென்று பலருக்கு முன் அவரை திட்டுவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம் தான்.
மேலும், அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி, முதல்வர், அமைச்சருக்கு இந்தப் பெண் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அந்தப் பெண் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து இந்த நபர் விவாகரத்து கேட்டுள்ளார்; அவருக்கு விவாகரத்து அளித்தது செல்லும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement