கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தெங்கன்குழி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(26). இவர் தனது நண்பரான சந்தோஷ்(26) என்பவருடன் நேற்று மாலை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் முளகுமூடை பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது திக்கணங்கோடு பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக தற்கொலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வேன் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.