டெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் (72) காலமானார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்டக்குழு உறுப்பினராக அபிஜித் சென் பதவி வகித்தார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டுகளாக பொருளாதார பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
